விளையாட்டில் சிறப்பான திறமைகளைக் கொண்டிருக்கும் வீர, வீராங்கனைகளுக்கு அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க அரசு தீர்மானித்துள்ளது. இத்தகவலை விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இலங்கையிலிருந்து வீர, வீராங்கனைகளை பங்குபற்றச் செய்யும் முயற்சிகளும் அவர்களுக்கான பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இதில் கலந்துகொள்ளும் வீர, வீராங்கனைகள் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தும் பட்சத்தில், அவர்கள் உரிய தகுதிகளைக் கொண்டிருந்தால் அரச நிறுவனங்களில் பணி நியமனங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர  குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.