இன்றைய அமைச்சரவை முடிவுகள்

Published By: Priyatharshan

10 Jan, 2018 | 04:54 PM
image

கடந்த 2018.01.09 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று இடம்பெற்றது.

அமைச்சரவை தீர்மானங்கள் வருமாறு,

01. அரச கடன் முகாமைத்துவம் (விடய இல. 10)

தற்போதைய நிலைமையில் 2020 ஆம் ஆண்டு முடிவடையும் போது, தலா தேசிய உற்பத்தி வீதமானது அரச கடன் வீதத்தில் 70 வீதம் வரை குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உப குழுவின் வேண்டுகோளின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் மூலம் இது தொடர்பில் மாற்று நடவடிக்கை ஒன்றை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்விடயம் தொடர்பில் அரச கடன் முகாமைத்துவம் தொடர்பில் முதலீட்டு நிறுவனங்களின் மூலமும் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அம்மாற்று தெரிவுகள், யோசனைகள் மற்றும் பொறுப்புக்கள் முகாமைத்துவ செயன்முறையினை செயற்படுத்தும் போது முகங்கொடுக்க வேண்டிய சவால்கள் தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டதுடன் அமைச்சரவையின் மூலம் அவ்வம்சங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டன.

02. ‘Wolbachla’ எனும் பற்றீரியாவின் மூலம் டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கான நியம வேலைத்திட்டமொன்றை அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் செயற்படுத்தல் (விடய இல. 11)

டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்காக ‘Wolbachla’ எனும் பற்றீரியாவினை பயன்படுத்துவதன் சாதக தன்மை தொடர்பில் அவுஸ்திரேலியாவின் மொனேஸ் பல்கலைக்கழகம் வெற்றிகரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளது. இம்முறை தொடர்பில் அவுஸ்திரேலியா, வியட்நாம், இந்தேனேஷியா, பிரேசில் மற்றும் கொலொம்பியா ஆகிய நாடுகளில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வெற்றியும் கண்டுள்ளது.

அதனடிப்படையில் ‘Wolbachla’ எனும் பற்றீரியாவின் மூலம் டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கான நியம வேலைத்திட்டமொன்றை அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சில பிரதேசங்களில் செயற்படுத்துவது தொடர்பில் சுகாதாரம்ரூபவ் போசணை மற்றும் தேசிய மருத்துவ அமைச்சர் (வைத்தியர்) ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. ‘கருத்தரிக்க முடியாதவர்களுக்காக’ (Subfertility)சிகிச்சை அளிப்பதற்காக பூரணத்துவமிக்க சிகிச்சை நிலையம் ஒன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 13)

‘கருத்தரிக்க முடியாதவர்களுக்காக’ (Subfertility) சிகிச்சை அளிப்பதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பூரணத்துவமிக்க சிகிச்சை நிலையம் ஒன்றை முதலில் காசல் வீதி மகளீர் வைத்தியசாலையில் ஸ்தாபிப்பதற்கும், அதன் இரண்டாம் தொகுதியினை காலி கராப்பிட்டிய நவீன மகப்பேற்று வைத்தியசாலையில் ஸ்தாபிப்பதற்கும் மூன்றாம் கட்டத்தின் கீழ் ஏனைய அனைத்து மாகாணங்களிலும் அவ்வாறான சிகிச்சை நிலையங்கள் ஒன்று வீதம் ஸ்தாபிப்பதற்கும் சுகாதாரம்ரூபவ் போசணை மற்றும் தேசிய  மருத்துவ அமைச்சர் (வைத்தியர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. ‘வளர்ச்சிக்கான நல்லாட்சி’ (Governance for Growth)வேலைத்திட்டத்தினை செயற்படுத்தல் (விடய இல. 14)

நல்லாட்சியின் நிமித்தம் அரசாங்கத்தினால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பொதுமக்களுக்கு அரச சேவைகளை பெற்றுக் கொடுப்பதனை விருத்தி செய்வதற்காக 31 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. 

இந்நிதியினை பயன்படுத்தி ‘வளர்ச்சிக்கான நல்லாட்சி’ (Governance for Growth) வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரேரிக்கப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டத்தினை அடுத்து வரும் 05 வருட கால பகுதிக்குள் செயற்படுத்துவதற்கும் அது தொடர்பில் அவுஸ்திரேலியா அரசாங்கத்துடன் மேலாண்மை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்குமாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. தற்போது நடைமுறையிலுள்ள வீசா வெளியிடும் செயன்முறையினை முறைப்படுத்தல் மற்றும் புதுப்பித்தல் (விடய இல. 16)

இலங்கையில் அபிவிருத்தி செயன்முறைக்காக தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக தற்போது நடைமுறையிலுள்ள வீசா வெளியிடும் செயன்முறையினை முறைப்படுத்தல் மற்றும் புதுப்பிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போது பயன்பாட்டிலுள்ள வீசா வகைகளுக்கு மற்றும் அவற்றுக்காக அறவிடப்படுகின்ற கடட்ணங்களில் திருத்தம் செய்வதற்கும் தற்போது இலங்கை ரூபாவில் அறவிடப்படுகின்ற கட்டணத்தினை அமெரிக்க டொலர்களில் அறவிடுவதற்கும் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் டூரம் சிபார்சுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் கீழ்க்காணும் யோசனைகளை வீசா வெளியிடும் செயன்முறைக்கு உள்வாங்கி 1948 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க குடிவரவு – குடியகழ்வு சட்டத்தின் 14 ஆம் உறுப்புரை மற்றும் அதற்கான நிபந்தனைகளை பொருத்தமான முறையில் திருத்தம் செய்வது தொடர்பில் உள்நாட்டலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை முதலீட்டு சபையின் கீழ் காணப்படுகின்ற துறைகளின் முதலீட்டாளர்கள்/ பணியாளர்களுக்கு உரிய குடியிருப்பு விசாக்களை சிபார்சு செய்யும் அதிகாரத்தினை முதலீட்டு சபை உரித்தாகும் அமைச்சின் செயலாளருக்கு வழங்குதல்.

செல்லுபடியாகும் வீசா கால எல்லையினை கடந்த வெளிநாட்டவர்களின் வீசா கட்டணத்துக்கு மேலதிகமாக 500 அமெரிக்க டொலர்களை தண்டப்பணமாக அறவிடல்.

வெளிநாட்டு மாணவர்களுக்காக முழுமையான கல்வி நடவடிக்கை கால எல்லைக்காக குடியிருப்பு விசாக்களை வழங்குதல்.

இலங்கையில் 500,000 அமெரிக்க டொலர்கள் நிதியினை முதலிடுகின்ற வெளிநாட்டவர்களுக்கு 10 வருட கால எல்லைக்காக குடியிருப்பு விசாக்களை வெளியிடல்.

இலங்கை பிரஜையொருவர் மற்றும் விவாகமான வெளிநாட்டு வாழ்க்கை துணைக்காக 05 வருட காலத்துக்காக வாழ்க்கை துணை வீசா மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கும் வீசாவினை பெற்றுக் கொடுத்தல்.

தனது இலங்கை வாழ்க்கை துணை மரணமடைந்த வெளிநாட்டு துணைக்காக மற்றும் இலங்கையினுள் 10 வருட காலம் தொடர்ந்து வசித்து வருகின்ற அல்லது 18 வயதுக்கு குறைந்த குழந்தைகள் உள்ள வெளிநாட்டு வாழ்க்கை துணைக்காக தொழில் ஈடுபடுவதற்காக 02 வருட காலத்துக்கு குடியிருப்பு விசாக்களை பெற்றுக் கொள்ளல்.

இரட்டை பிரஜா உரிமைக்காக விண்ணப்பிக்க தகைமையற்ற, தற்போது வெளிநாடொன்றில் பிரஜாவுரிமை பெற்றுள்ள, இலங்கையர்களாக காணப்படுகின்ற நபர்களுக்கு நிரந்தர குடியிருப்பு விசாவினை பெற்றுக் கொடுத்தல்.

06. கடலில் கூடுகளினை பயன்படுத்தி கடல் மீனினங்களை வளர்க்கும் வேலைத்திட்டத்துக்கு உரிய சேவையினை வழங்கும் நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்காக காணியொன்றை பெற்றுக் கொடுத்தல் (விடய இல.17)

கடலில் கூடுகளினை பயன்படுத்தி கடல் மீனினங்களை வளர்க்கும் வேலைத்திட்டத்தின் கீழ் வருடாந்தம் 2,000 மெட்ரிக் தொன் மீன் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதற்கு அவசியமான சேவையினை வழங்குவதற்கும் மீனினங்களை சந்தைப்படுத்துவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வேண்டி சேவை மத்திய நிலையமொன்றை நிர்மாணிப்பதற்காக தேவை எழுந்துள்ளது. அதற்காக மூதூர் பிரதேச செயலகப்பிரிவில் காணப்படுகின்ற 01 ஏக்கர் காணிப்பகுதியொன்றை, குளோபல் சிலோன் சீ புட் (தனியார்) கம்பனிக்கு குத்தகை அடிப்படையில் 30 வருட காலத்துக்கு வழங்குவது தொடர்பில் மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. எல்ல வாவி நீர்த்தேக்கத்துக்காக காணிகளை சுவிகரித்ததன் விளைவாக பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் (விடய இல. 23)

இரத்தினபுரி மாவட்டத்தில், எம்பிரிப்பிட்டிய பிரதேச செயலகப்பிரிவில் நிர்மானிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள எல்ல வாவி நீர்த்தேக்கத்துக்காக காணிகளை சுவிகரித்ததன் விளைவாக பாதிப்புக்குள்ளான 20 குடும்பங்கள் இடம்பெயர்ந்து வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்குடும்பங்களுக்காக புதிய வீடுகளை நிர்மானித்துக் கொள்வதற்காக காணியொன்றினை பெற்றுக் கொடுப்பதற்கும் அவர்களுக்கு சாதாரண நட்டரூடவ்டு ஒன்றினை பெற்றுக் கொடுப்பதற்கு உகந்த வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்குமாக நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. தோட்டப்புற பகுதிகளுக்காக புதிய கிராமிய அபிவிருத்தி அதிகார சபையினை ஸ்தாபித்தல் (விடய இல. 27)

தோட்டப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தினை விருத்தி செய்துரூபவ் அவர்களை தேசிய அபிவிருத்தி செயன்முறையில் பங்களிப்பு செய்வதற்கு ஏதுவான முறையில் அவர்களை பலப்படுத்தும் நோக்கில் ‘தோட்டப்புற பகுதிகளுக்காக புதிய கிராமிய அபிவிருத்தி அதிகார சபையினை’ ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அந்நடவடிக்கைகளுக்காக சட்ட வரைஞர் திணைக்களத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி, அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திசாநாயக்க மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் பிரஜைகள் அபிவிருத்தி அமைச்சர் யு.பழனி திகாம்பரம் ஆகியோரால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அச்சட்ட மூலம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் பிரதான கட்டிடத்தினை மறுசீரமைப்பு செய்தல் (விடய இல. 29)

தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள மிகவும் பெறுமதியான ஆவணங்களை உரிய தரத்தின் அடிப்படையில் பாதுகாப்பதற்கு அவசியமான பொருத்தமான சூழலினை நிர்மானிப்பதற்கும் உயர் சுவடிக்கூட சேவையினை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு ஏதுவான வகையில் தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் பிரதான கட்டிடத்தினை மறுசீரமைப்பு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. பொதுத்துறை கணக்கியல் தர நிலைகளின் படி உள்ளூராட்சி மன்றங்களுக்கான பொதுவான கணக்கியல் முறையொன்றை தயாரித்தல் (விடய இல. 31)

பொதுத்துறை கணக்கியல் தர நிலைகளின் படி உள்ளூராட்சி மன்றங்களுக்கான பொதுவான கணக்கியல் முறையொன்று உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய கணக்கியல் செயன்முறையினை 2018ம் ஆண்டிலிருந்து நாட்டின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அது தொடர்பில் குறித்த அதிகாரிகளுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், குறித்த முறையினை 2018 ஆம் ஆண்டு நிதியாண்டிலிருந்து மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் செயற்படுத்துவது தொடர்பில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. களுத்துறை மாவட்டத்தில், பேருவளை மற்றும் அளுத்கமை பிரதேசங்களில் 2014-06- 15 மற்றும் 2014-06- 16 தினங்களில் ஏற்பட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈட்டினை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 32)

களுத்துறை மாவட்டத்தில்ரூபவ் பேருவளை மற்றும் அளுத்கமை பிரதேசங்களில் 2014-06- 15 மற்றும் 2014-06- 16 தினங்களில் ஏற்பட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்ட வீட்டு உபகரணங்கள் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளை

நெறிப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நட்டஈடும் இதுவரை வழங்கப்படவில்லை. குறித்த பாதிப்புக்கள் தொடர்பில் பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவினால் மேற்கூறப்பட்ட பாதிப்புக்களுக்கும் நட்டஈட்டு தொகையினை பெற்றக் கொடுப்பதற்கு சிபார்சுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்நிர்மானம், மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கவனத்திற் கொண்டு, தற்போது காணப்படுகின்ற விதிகளுக்கு அமைவாக, அந்நட்டஈட்டு தொகையினை வழங்குவது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

12. சர்வதேச போட்டி,போட்டிகளை இலக்காகக் கொண்ட தேசிய அணியின் செயற்றிறனை விருத்தி செய்தல் (விடய இல. 33)

சர்வதேச போட்டி, போட்டிகளை இலக்காகக் கொண்டு இலங்கையிலிருந்து தேசிய வீர வீராங்கனைகளை பங்குபற்றச் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. அப்போட்டிகளுக்கு வீர வீராங்கனைகளை பயிற்றுவிக்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

குறித்த பயிற்சி வகுப்புக்களில் பயிற்சி பெருகின்ற அநேகமானோர் அரச, முப்படை, பொலிஸ் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டு பயிற்சியில் ஈடுபடுவதால், அவர்களை முழுமையாக விடுவித்துக் கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதேபோன்று அனைத்து பயிற்சி குழாத்துக்கும் தேசிய மற்றும் சர்வதேச பயிற்றுவிப்பாளர்களின் சேவையினை பெற்றுக் கொள்வதற்கும் பயிற்சிகளில் ஈடுபடும் வீர,வீராங்கனைகளுக்கு சகல வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கும் விளையாட்டுக்களில் உயரிய திறமைகளினை வெளிக்காட்டும் வீர, வீராங்கனைகள் நியமனம் பெறுவதற்கான தகைமைகளை கொண்டிருப்பின் அரச நிறுவனங்களில் நியமனங்களை பெற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. பிபிலையிலிருந்து செங்கலடி வரையான வீதியின் (86.75 கி.மீ) நிர்மானப்பணிகளை மேற்பார்வை செய்வதற்கான ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 38)

பிபிலையிலிருந்து செங்கலடி வரையான வீதியின் (86.75 கி.மீ) நிர்மானப்பணிகளை மேற்பார்வை செய்வதற்கான ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 258.3 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் Resources Development (Pvt) Ltd. கம்பனிக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14.ஹொரன நவீன தொழில் பயிற்சி நிலையத்தினை நிர்மானிப்பதற்கான ஒப்பந்தத்தினை வழங்குதல் (விடய இல. 41)

ஹொரன நவீன தொழில் பயிற்சி நிலையத்தினை நிர்மானிப்பதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 141 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s Asiri Constructions நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் நிபுணத்துவ அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. கடல் மணலினை கொண்டு கெரவலபிட்டிய, முதுராஜவெல பிரதேசத்தினை நிரப்புவதற்காக கடல் மணல் அகழ்வு மற்றும் அதனை உந்தும் (Pumping)நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (விடய இல. 48)

கடல் மணலினை கொண்டு கெரவலபிட்டிய, முதுராஜவெல பிரதேசத்தினை நிரப்புவதற்காக கடல் மணல் அகழ்வு மற்றும் அதனை உந்தும் (Pumping)நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உகந்த ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்வதற்காக சர்வதேச விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன் அவ்வொப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 19.97 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பீட்டு தொகைக்கு டென்மார்க்கின் M/s Rohde Nielsen A/S நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. செத்சிறிபாய சூழலில் நிர்மானிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பல மாடிகளைக் கொண்ட அலுவலக கட்டிடத் தொகுதியின் கோபுர அடித்தளத்தினை நிர்மானித்தல் (விடய இல. 45)

செத்சிறிபாய சூழலில் நிர்மானிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 25 மாடிகளைக் கொண்ட அலுவலக கட்டிடத் தொகுதியினை மூன்றரை வருட காலத்துக்குள் நிர்மானித்து முடிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கான மதிப்பீட்டு தொகை 15.6 பில்லியன் ரூபாய்களாகும். உத்தேசிக்கப்பட்டுள்ள குறித்த கட்டிடத் தொகுதியின் கோபுர அடித்தளத்தினை நிர்மானிப்பதற்கான ஒப்பந்தத்தினை வழங்குவதற்காக, சர்வதேச விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன் அவ்வொப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 1,155 மில்லியன் மதிப்பீட்டு தொகைக்கு, M/s San Piling (Pvt) Ltd. நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. கண்டி, நிலக்கீழ் மழை நீர் வடிகால் பிரிவினை புனர்நிர்மானம் செய்தல் (விடய இல. 46)

உபாய முறைகள் நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற கண்டி நகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக, கண்டி, நிலக்கீழ் மழை நீர் வடிகால் பிரிவினை புனர்நிர்மானம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த பணியினை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 1,016.3 மில்லியன் மதிப்பீட்டு தொகைக்கு, Ludwig Pfeiffer (Germany) – Gypsum Structural (India) (Pvt) Ltd. இணை வியாபார நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

18. புத்தளம் லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தில் நிலக்கறி களஞ்சிய கூடம் (Yard) மற்றும் சாம்பல் களஞ்சிய கூடம் (Yard) ஆகியவற்றை சூழ காற்று தடுப்பொன்றை நிர்மானித்தல் (விடய இல. 58)

புத்தளம் லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தில் தற்போது காணப்படுகின்ற காற்று தடுப்பினை நிலக்கறி களஞ்சிய கூடம் (லுயசன) மற்றும் சாம்பல் களஞ்சிய கூடம் (Yard)ஆகியவற்றை சூழவும் நிர்மானிப்பதற்கு உகந்த ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்வதற்காக விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் குறித்த ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 723.7 மில்லியன் மதிப்பீட்டு தொகைக்கு, Laugfs Engineering (Pvt) Ltd. and Sanken Construction (Pvt) Ltd. நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரன்ஜித் சியபலாப்பிட்டடியவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. இலங்கை பொலிஸ் மற்றும் விசேட படையணி ஆகியவற்றிக்காக சீருடைகள் மற்றும் ஏனைய புடவை வகைகளை கொள்வனவு செய்தல் (விடய இல. 52)

இலங்கை பொலிஸ் மற்றும் விசேட படையணி ஆகியவற்றிக்காக சீருடைகள் மற்றும் ஏனைய புடவை வகைகளை தேசிய புடைவைகள் வேறுபடுத்தி கொடுக்கும் குழுவினால் சிபார்சு செய்யப்பட்டுள்ள தேசிய புடவைகள் உற்பத்தியாளர்களிடத்தில் இருந்து 257.3 மில்லியன் ரூபா தொகைக்கு கொள்வனவு செய்வது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் வேலைத்திட்டம் - கட்டம் ii – முழுமையான நிர்மானங்கள் மற்றும் விலை மனுக்களை கோருவதற்கான ஆலோசனை சேவைக்கான ஒப்பந்தம் (விடய இல. 53)

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் வேலைத்திட்டம் - கட்டம் ii – முழுமையான நிர்மானங்கள் மற்றும் விலை மனுக்களை கோருவதற்கான ஆலோசனை சேவைக்கான ஒப்பந்தத்தினை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் இலங்கையின் M/s Ceywater Consultants (Pvt) Ltd. மற்றும் இலங்கையின் M/s EML Consultants (Pvt) Ltd. நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ஜப்பானின் M/s NJS Consultants Co. Ltd. வழங்குவது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. 2005 ஆம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் பல்வேறு வகையிலும் பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு சலுகை அளித்தல் (விடய இல. 56)

2005 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் பல்வேறு வகையிலும் பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு சலுகை அளிப்பதற்காக பத்திரிகை விளம்பரங்களின் ஊடாக வாய்ப்பளிக்கப்பட்டது. அம்மேன்முறையீடுகள் தொடர்பில் அமைச்சரவைக்கு சிபார்சுகளை முன்வைப்பதற்காக முன்னால் வெளிவிவகார அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. அதன் மூலம் மேன்முறையீட்டினை பொறுப்பெடுக்கும் கால எல்லை பின்னர் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. அதன் போது மேலும் 14 மேன்முறையீடுகள் கிடைக்கப் பெற்றன.

அதனடிப்படையில், அவற்றினை பரிசீலித்து சிபார்சுகளை முன்வைப்பதற்காக அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை உப குழுவினை நியமிப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மங்கள சமரவீர அவர்கள், (நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் - தலைவர்)

அநுர பிரியதர்ஷன யாப்பா, (அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்)

கயந்த கருணாதிலக்க, (காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் மீது...

2024-07-15 12:27:03
news-image

இலங்கை தமிழர் அரசியல் சமகால வரலாற்றில்...

2024-07-15 11:14:17
news-image

இளைஞர்களுக்கான உத்தரவாதங்கள் இல்லாத கடன்கள்

2024-07-14 17:31:25
news-image

இங்கிலாந்து தேர்தலின் விபரிப்பு

2024-07-14 17:39:59
news-image

சம்பந்தனின் அரசியல் தலைமைத்துவமும் தவறவிடப்பட்ட வாய்ப்புகளும்

2024-07-14 16:39:53
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-07-14 17:57:09
news-image

நேட்டோவை நம்பி நிற்கும் உக்ரேன்

2024-07-14 15:04:54
news-image

மீண்டும் கூட்டமைப்பு?

2024-07-14 18:03:53
news-image

தேர்தலுக்காக போராடும் நிலை

2024-07-14 18:06:33
news-image

‘யுக்திய’வை கேள்விக்குள்ளாக்கியுள்ள அத்துருகிரிய சூட்டுச் சம்பவம்

2024-07-14 18:08:25
news-image

எதிர்ப்பு அரசியலும் வேண்டாம்; எடுபிடி அரசியலும்...

2024-07-14 18:09:52
news-image

மற(றை)க்கப்படும் இனப்படுகொலை

2024-07-14 18:11:06