மட்டக்களப்பு - கல்லடி புது முகத்துவாரம், களப்பிலிருந்து இன்று காலை 10 மணியளவில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த நபர்தற்கொலைசெய்து கொண்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நபர் மட்டக்களப்பு நகர் பொதுச் சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவரான 73 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான வைத்திலிங்கம் தர்மலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் வீட்டில் சண்டைபிடித்து விட்டு நேற்று இரவு 7 மணியளவில் வீட்டில் இருந்து வெளியேறியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர் கல்லடிப் பாலத்திலிருந்து கடலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாமென உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தற்கொலைசெய்து கொண்டவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலை வைக்கப்பட்டுள்ளது.