மட்டக்களப்பு - கல்லடி புது முகத்துவாரம், களப்பிலிருந்து இன்று காலை 10 மணியளவில் ஆண் ஒருவரின் சடலத்தை காத்தான்குடி பொலிஸார் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் காத்தான்குடி பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.