பாணந்துறை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் துப்பாக்கி முனையில் மிரட்டி துணிகரக் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக் கொள்ளைச் சம்பவம் இலத்திரனியல் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கியுடன் குறித்த வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் இருவர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு பணத்தினை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர்  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் அவர்களை கைது செய்ய காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.