பணம் செலுத்தாது கடனுக்கு கொத்துரொட்டி கேட்ட நபர்களுக்கு உணவக உரிமையாளர் கடனுக்கு கொத்துரொட்டி வழங்க மறுத்துள்ள நிலையில் குறித்த உணவகத்தை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இச் சம்பவம் யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள உணவகத்திற்கு வந்த சிலர் பணம்செலுத்தாது கடனுக்கு கொத்துரொட்டி தருமாறு கேட்டள்ளனர்.

இந்நிலையில் உணவக உரிமையாளர் கடனுக்கு கொத்துரொட்டி வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த குறித்த நபர்கள், உணவகம் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் அங்கிருந்த உடைமைகளை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.