தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரியில் நடைபெறும் 2018ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தமது குழு பங்கேற்கவுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.

வடகொரிய மற்றும் தென்கொரிய உயர்மட்டக் குழுவினர்களுக்கிடையில் பன்முன்ஜொம் கிராமத்திலுள்ள சமாதான இல்லத்தில் இன்று  நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வடகொரியக் குழுவினர் கலந்துகொள்வது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலிலேயே வடகொரியா தமது நாட்டுக் குழுவை அனுப்பச் சம்மதித்துள்ளது.

விளையாட்டு வீரர்கள், ஆதரவாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்டோர் அக்குழுவில் அடங்குகின்றனர். இவர்களுடன் அவதானிகளும், ஊடகவியலாளர்களும் இணையவுள்ளதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.