கச்சதீவு அந்தோனியார் திருவிழா பெப்ரவரியில்

Published By: Priyatharshan

09 Jan, 2018 | 01:21 PM
image

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி  மாதம் 23,24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை இலங்கையில் இருந்து பத்தாயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர்கள் என தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

கச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயர்த்த கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…

கச்சதீவில் இம்முறை  இரு நாட்டில் இருந்தும்  அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த முறை இலங்கையில் இருந்து 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

திருவிழாவுக்கான ஒழுங்குகளுக்குரிய  பிரதான பொறுப்பை கடற்படையினர் ஏற்றுள்ளனர். அதே போன்று ஏனைய துறையினர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் படி தத்தமது சேவைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்கர்களின் நலன் கருதி நிரந்தர மலசல கூட வசதிகள் மற்றும் மேலதிகமாக தற்காலிக மலசலகூட வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் பெப்ரவரி  மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவன் வரையான பேருந்து சேவை அதிகாலை 4 மணியிலிருந்து நண்பகல் ஒரு மணிவரை நடைபெறும்.  அதே போன்று குறிகட்டுவனில் இருந்து கச்சதீவு வரை காலை 5 மணிக்கு ஆரம்பித்து 2 மணி வரை நடைபெறும். படகுச்சேவைக்கான ஒருவழி கட்டணமாக 300 ரூபா அறவிடப்படவுள்ளது. நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கு ஒரு வழி கட்டணமாக 225 ரூபா அறவிடப்படவுள்ளது.

அத்துடன் சேவையில் ஈடுபடும் படகுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே சேவைக்கு அனுமதிக்கப்படவுள்ளது. 

பயணிகள் பாதுகாப்பு அங்கி அணியவேண்டும் என்பது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இம்முறை பொலிஸ் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 200 பொலிஸார் சேவையில் ஈடுபடவுள்ளனர். பயணிகள் படகு சேவை இடம்பெறும் போது கடற்படை ரோந்து நடவடிக்கைகள் நடைபெறும் என்றார்.

கச்சதீவு ஆலய வருடாந்த உற்சவ ஏற்பாடுகள் தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது .

இந்த கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம், கடற்படை மற்றும் நெடுந்தீவு பங்குத் தந்தை, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினர் இக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளையான் வடக்கு மாகாணம் குறித்தும் அவதானம்...

2023-11-29 19:10:16
news-image

மத்தள விமான நிலையத்தால் வருடாந்தம் 2...

2023-11-29 20:35:34
news-image

மழை அதிகரிக்கும்...

2023-11-30 06:21:05
news-image

அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா ...

2023-11-29 19:07:39
news-image

2024 ஆம் ஆண்டு முதல்  தனி...

2023-11-29 20:46:22
news-image

யாழ்.நகர அபிவிருத்தி தந்திரோபாய திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட...

2023-11-29 19:22:09
news-image

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீரர்களின் ஆதரவு...

2023-11-29 21:00:05
news-image

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக...

2023-11-29 20:57:16
news-image

சவூதி நிதியம் மாத்திரமே தொடர்ந்து உதவி...

2023-11-29 20:34:24
news-image

கொழும்பில் 50 ஆயிரம் பேருக்கு குடியிருப்பு...

2023-11-29 16:45:36
news-image

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மேலும் விரிவடைந்து...

2023-11-29 17:31:21
news-image

பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் : இல்லாவிடில்...

2023-11-29 16:54:56