இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 54 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட புதுக்கோட்டை, காரைக்கால் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 54 மீனவர்களை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிவான் எம். எம். ரியால், மீனவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து இந்திய மீனவர்கள்  அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.