(எம்.சி.நஜிமுதீன் )

மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு எதிராக பாராமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

அது தொடர்பிலான பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு அக் கூட்டு எதிரணியின் தலைவர்  தினேஷ் குணவர்தனவிடம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கூட்டுஎதிரணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீ வஜிரா ஷர்ம நிலையத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.