இட­மாற்­றத்தை இரத்­துச்­செய்­யு­மாறு அர­சி­யல்­வா­திகள் என்னை கஷ்­டப்­ப­டுத்­து­கி­றார்கள்

Published By: Robert

09 Feb, 2016 | 09:07 AM
image

இட­மாற்றம் பெற்ற ஆசி­ரி­யர்கள் சிலர் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் சென்று இட­மாற்­றத்தை இரத்துச் செய்­யு­மாறு கோரு­கின்­றார்கள். சில ஆசி­ரி­யர்கள் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் செல்­கி­றார்கள். அந்த அர­சி­யல்­வா­திகள் இட­மாற்­றத்தை இரத்­துச்­செய்­யு­மாறு என்னை கஷ்­டப்­ப­டுத்­து­கி­றார்கள். நான் இட­மாற்றம் பெற்றுச் சென்­றாலும் பர­வா­யில்லை. எமது பிர­தேச கல்வி வளர்ச்­சிக்­காக எதையும் எதிர்­கொள்­வ­தற்குத் தயா­ரா­க­வுள்­ளேன் என்று கல்­குடா வலயக் கல்விப் பணிப்­பாளர் செ. ஸ்ரீகி­ருஸ்­ண­ராஜா தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்பு கல்­குடா கல்வி வல­யத்தில் சுமார் 4000 மாண­வர்­க­ளுக்­கான தள­பா­டங்கள் பற்­றாக்­கு­றை­யாகக் காணப்­ப­டு­வ­தா­கவும் அவர் கூறினார்.

மட்­டக்­க­ளப்பு கதி­ர­வெளி விக்­னேஸ்­வரா மகா வித்­தி­யா­லய வரு­டாந்த விளை­யாட்டுப் போட்­டியின் இறு­திநாள் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கை­யில,

கல்­குடா கல்வி வல­யத்தில் சுமார் 28,500 மாண­வர்கள் கல்வி கற்­கின்­றனர். வல­யத்தில் ஆரம்பப் பிரிவு மாண­வர்­க­ளுக்கு 2000 தள­பா­டங்­களும் இடை­நிலைப் பிரிவு மாண­வர்­க­ளுக்கு 2000 தள­பா­டங்­களும் பற்­றாக்­கு­றை­யாகக் காணப்­ப­டு­கி­றது.

இவ்­வி­டயம் தொடர்­பாக கல்வி இரா­ஜாங்க அமைச்சர் இரா­தா­கி­ருஸ்­ண­னிடம் கூறிய போது தள­பா­டங்­களை விரை­வாகப் பெற்­றுத்­த­ரு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்ளார். தள­பா­டங்கள் கிடைக்கும் பட்­சத்தில் வாகரை பிர­தே­சத்­துக்கு முன்­னு­ரி­மை­ய­ளிக்­கப்­படும்.

எதிர்­வரும் 25ஆம் திக­திக்கு முன்பு வாகரைப் பிர­தே­சத்­தி­லுள்ள ஆசி­ரியர் வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்பேன்.

கல்­குடா கல்வி வலய இட­மாற்றம் பெற்ற ஆசி­ரி­யர்கள் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் சென்று இட­மாற்­றத்தை இரத்துச் செய்­யு­மாறு கோரு­கின்­றார்கள். சில ஆசி­ரி­யர்கள் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் செல்கிறார்கள்.

அந்த அரசியல்வாதிகள் இடமாற்ற த்தை இரத்துச்செய்யுமாறு என்னை கஷ்டப்படுத்துகிறார்கள். நான் இட மாற்றம் பெற்றுச் சென்றாலும் பரவா யில்லை. எமது பிரதேச கல்வி வளர்ச்சிக்காக எதையும் செய்யத் தயாராகவுள்ளேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47