"கடந்த தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் வென்றார்களே தவிர மக்கள் வாக்களித்துவிட்டு தோற்றுப்போனார்கள்"

Published By: Digital Desk 7

09 Jan, 2018 | 11:57 AM
image

"வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் மக்கள்  தங்களின் பிரதிநிதிகளாக  வினைதிறனும், ஒழுக்கமும் உள்ள பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். அதுவே  அளிக்கபோகும் வாக்கை அர்ததமுள்ளதாக்கும்" என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவமும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்

நேற்று கிளிநொச்சி புதுமுறிப்பு கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

"உள்ளூராட்சி சபை மக்களுக்கான அரசியல் உரிமையை பெற்றுத்தருகின்ற களமல்ல. உள்ளூராட்சி சபைகள் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்கின்ற அமைப்பு. அந்தவகையில் ஒரு உள்ளூராட்சி சபையினால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பில் என்னால் உறுதியளிக்க முடியும். மாறாக உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிப்பெற்றால் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையை பெற்றுத்தருவேன் என்பது கலைப்பிரிவில் சித்தியடைந்தால் மருத்துவராகமுடியும் என்பது போன்றது.

எனவே கடந்த காலங்களில் பிரதேச சபைகளின் ஆட்சி அதிகாரங்களுக்கு மக்களால் தெரிவு செய்து அனுப்பட்டவர்கள் அங்கு வினைதிறனுடன் செயற்படவில்லை. அதற்கு சாட்சியாக எங்களது பிரதேசங்களின் உள்ளூர் வீதிகள், மயாணங்கள், மைதானங்கள், சந்தைகள் என்பன காணப்படுகின்றன.

ஆனால் நான் என்னுடைய ஜந்து வருடகால பதவிக்காலத்தில் என்னால் முடிந்தளவுக்கு மக்களின் பிரச்சினைக்களுக்கு தீர்வுகளை கண்டிருக்கிறேன். பிரதேசங்களின் அபிவிருத்திகளை வினைத்திறனுடன் மேற்கொண்டிருகிறேன்.  அதற்கு மக்களே சாட்சிகளாக உள்ளனர்.

நாங்கள் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வரும் விடயம் தேர்தல்களில் மக்கள் வெல்ல வேண்டும் என்பதே, ஆனால் கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் வென்றார்களே தவிர மக்கள் வாக்களித்துவிட்டு தோற்றுப்போனார்கள். இந்த நிலைமை தொடரக் கூடாது. மக்களுக்கு  அர்ப்பணிப்புடன் பணியாற்றக் கூடிய, ஒழுக்கமுள்ள, நல்ல பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். கட்சிகளுக்கு அப்பால் பிரதேசங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை பார்த்து வாக்களிக்க வேண்டும். 

குறுக்கு வழியில்  வாக்குகளை பெற்று வெல்ல வேண்டும் என்ற நோக்கில் சில தரப்புக்கள் என் தொடர்பில் பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். நான்  மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து வெளியேறி சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினை உருவாக்கி  செயற்பட்டு வருகின்றேன்.

எங்களுடைய அமைப்பு இந்த தேர்தலில் கேடயச் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகின்றது.  இந் நிலையில்  நான் மீண்டும் ஈ.பி.டி.பியுடன் இணைந்துவிடுவேன்  என்ற வதந்தியை பரப்பி வருகின்றார்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வெளியேறிய நான் அந்த  மக்களின் உணர்வுகளுக்கு மாறாக   எச்சந்தர்ப்பத்திலும் செயற்படமாட்டேன். இதனை மக்கள் நூறு வீதம் நம்பவேண்டும். மாறாக சிலரின் பொய்யான போலி பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்."என மக்களிடம் கேட்டுக்கொண்டார். 

இச்சந்திப்பில் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் சந்திரன், விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த தங்கராசா, செல்வாநகர் வட்டார  வேட்பாளர்களான தர்மலிங்கம் பாலதேவி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04