யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்றுவந்த முதியவர் இன்று காலை உயிரிழந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை வேனொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்திற்குள்ளாகின. 

இதில் 6 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 65 வயதுடைய துரைசிங்கம் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.