கார்கில்ஸ் வங்கி கிளை கதுருவெலவில்

Published By: Priyatharshan

09 Jan, 2018 | 10:36 AM
image

கார்கில்ஸ் வங்கி தனது புதிய கிளை­யை  கது­ரு­வெ­லவில் திறந்து வைத்­துள்­ளது. இக்­கி­ளை­யா­னது இல. 896, நிதஹஸ் சுவர்ண ஜெயந்தி மாவத்தை, கரு­து­வெல எனும் முக­வ­ரியில் அமைந்­துள்­ளது.

உள்ளூர் சமூ­கங்­களை இலக்­காகக் கொண்டு பொரு­ளா­தா­ர­ரீ­தி­யாக அர்த்தம் கொண்­ட­தா­கவும், சமூ­க­ரீ­தி­யாக பொறுப்­பு­ணர்வு கொண்­ட­தா­கவும் ஆக்கும் வகையில் வாழ்­வா­தா­ரங்­களை மேம்­ப­டுத்தும் வங்­கியின் பிராந்­திய முத­லீ­டு­களை இது பிர­தி­ப­லிக்­கின்­றது. நிகழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து சிறப்­பித்த மாவட்ட பிரதிச் செய­லா­ள­ரான  சுஜந்த ஏக்­க­நா­யக்க மற்றும் கௌரவ அதி­தி­யாகக் கலந்து சிறப்­பித்த கார்கில்ஸ் வங்­கியின் சில்­லறை வங்­கிச்­சேவைப் பிரிவின் பிர

திப் பொது முகா­மை­யா­ள­ரான  தர்ஷன ரட்­ணா­யக்க ஆகி­யோரால் இக்­கிளை திறந்து வைக்­கப்­பட்­ட­துடன், Cargills Foods Company Pvt Ltd நிறு­வ­னத்தின் பிர­தேச முகா­மை­யா­ள­ரான  பீ. பெருமாள், சில்­லறை வங்­கிச்­சேவைப் பிரிவின் தலைமை அதி­கா­ரி­யான  புத்­திக பெரேரா மற்றும் கார்கில்ஸ் வங்கி கது­ரு­வெல கிளைமுகா­மை­யா­ள­ரான  நீல் திசா­நா­யக்க ஆகி­யோரும் இந்­நி­கழ்வில் கலந்து சிறப்­பித்­தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right