சைட்டம் தனியார் மருத்­துவக் கல்­லூரி மாண­வர்­களின் பிரச்­சி­னைக்கு அமைச்­சர்­க­ளான  லக் ஷ்மன் கிரி­யெல்ல மற்றும் ராஜித சேனா­ரத்­ன­ஆ­கி­யோரே பொறுப்புக் கூற வேண்டும். அர­சி­யல்­வா­தி­களின் இர­க­சிய ஒப்­பந்­தங்­க­ளுக்கு எங்கள் பிள்­ளை­களை பலி­யாக்க முடி­யாது என சைட்டம் மருத்­துவக் கல்­லூரி மாண­வர்­களின் பெற்றோர் சங்கத் தலைவர் கெமுனு விஜே­ரத்ன தெரி­வித்தார். 

சைட்டம் மருத்­துவக் கல்­லூரி மாண­வர்­களின் பெற்றோர் சங்­கத்­தினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே   அவர் இதனை தெரி­வித்தார். 

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

சைட்டம் பிரச்­சினை தொடர்பில் பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது எமது பிள்­ளை­க­ளே­யாவர். அவர்­க­ளுக்­கான தீர்வை வழங்­கு­வதில் இந்த அர­சாங்கம் காலம் தாழ்த்தி வரு­கி­றது. சைட்டம் மருத்­துவக் கல்­லூரி பிரச்­சினை ஆரம்­பித்த காலப்­ப­கு­தியி­லேயே அது தொடர்­பான தீர்­வினை காண்­ப­தற்­கான குழு­வினை அமைக்கக் கோரி விண்­ணப்­பங்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. எவ்­வா­றேனும் பாதிக்­கப்­பட்­டுள்ள மாண­வர்­க­ளுக்கு அர­சாங்கம் தீர்­வினை வழங்க தாம­திக்கும் பட்­சத்தில் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான எமது போராட்டம் தொடரும் என்றார். 

இதேவேளை, சைட்டம் மருத்­துவக் கல்­லூ­ரியை இலங்கை தகவல் தொழில்­நுட்ப கல்வி நிறு­வ­னத்தின் கீழ் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான அர­சாங்­கத்தின் நோக்­கத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடி­யாது. இது சைட்டம் மருத்­துவக் கல்­லூ­ரியை மீண்டும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான அர­சாங்­கத்தின் ஆரம்­ப­க்கட்ட மறை­முக நோக்கம் என  இலங்கை மருத்­துவ பீட மாண­வர்­களின் பெற்றோர் சங்­கத் ­த­லைவர் தெரி­வித்­துள்ளார். 

சைட்டம் கல்­லூரி தொடர்­பாக நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த கலந்­து­ரை­யா­டலின் பின்னர் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனை தெரி­வித்தார். அங்கு அவர் மேலும் கருத் துத் தெரி­விக்­கையில்,

சைட்டம் மருத்­துவக் கல்­லூ­ரியை கடந்த வருடம் தடை செய்­வ­தாக அர­சாங்கத்தால் அறி­விக்­கப்­பட்­டது. எனினும் தற்­போது மீண்டும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்தும் வகை­யி­லான செயற்றிட்­டங்­களை இவ்­வ­ர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றன. அர­சாங்­கத்தின் இவ்­வா­றான  செயற்­பா­டு கள் தொடர்ந்தும் நீடிக்­கு­மானால் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான எமது போராட்­டமும் தொடரும். 

மேலும் இதன் கார­ண­மாக தேர்தல் காலத்தில் அர­சாங்கம் பாரிய நெருக்­க­டி­களை சந்­திக்க நேரிடும். அதேவேளை சைட்டம் பிரச்­சி­னைக்கு தீர்­வினை பெற்­றுத்­தர முன்­வரும் கட்­சிக்கும் வேட்­பா­ள­ருக்­குமே இம்­முறை தேர்­தலில் நாம் வாக்­க­ளிப்போம். அரசாங்கம் அதற்கான தீர்வினை வழங்காவிட்டால் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். பெப்ரவரி 10 தேர்தலின் பின்னரும் இதற்கான தீர்வு கிடைக்காத பட்சத்தில் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொள்வதற்கும் நாம் தயாராக உள்ளோம்.