அம்­பாறை மாவட்­டத்தில் திருட்டு மின் ­சாரம் பெறுவோர் மீது இலங்­கை மின் ­சார சபை சட்ட நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது.

சமீ­ப­கா­ல­மாக அம்­பாறை மாவட்­டத்தில் திருட்டு மின்­சாரம் பெறு­வோர் தொடர்பில் இலங்கை மின்­சார சபைக்கு முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றதன் ஊடாக அம்­பாறை மாவட்­டத்தில் பல பிர­தே­சங்­க­ளிலும் சட்­ட­வி­ரோ­த­மாக மின்­சாரம் பெறு­வோர்கள் சுற்றி வளைக்­கப்­பட்டு கைது செய்­யப்­பட்டு வரு­கின்­றனர்.

கொழும்­பி­லி­ருந்து வருகை தரும் விசேட மின்­சார சபை குழு­வினர், பிராந்­திய மின்­சார சபை ஊழி­யர்கள், பிர­தேச பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் ஆகியோர் இணைந்து இந்த சுற்­றி­வ­ளைப்­பு­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இதன்­மூலம் சட்­ட­வி­ரோத மின் பாவ­னை­யா­ளர்கள் கைது செய்­யப்­பட்டு அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, சம்­மாந்­துறை, அம்­பாறை ஆகிய நீதி­மன்­றங்­களில் ஆஜர்படுத்­தப்­பட்டு வரு­கின்­றனர்.

இலங்கை முழு­வதும் திருட்டு மின்­சாரம் பெறு­வோர்­களை கண்­ட­றிய மின்­சார சபை­யின் விசேட அதி­கா­ரிகள் கொண்ட குழு நிய­மிக்­கப்­பட்டு சுற்­றி­வ­ளைப்­பு­களை மேற்­கொண்­டுள்­ளனர். அத்­துடன் 0112422259 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என கேட்கப்பட்டுள்ளனர்.