மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரிலுள்ள வீடொன்றில் கொள்ளைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி-05, பழைய கல்முனை வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே நேற்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் குறித்த கொள்ளைச் சம்பம் இடம்பெற்றுள்ளதாக வீட்டின் உரிமையார் தெரிவித்தார்.

கொள்ளையிடப்பட்ட வீட்டில் இரு பெண்கள் மாத்திரம் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர் அங்கிருந்து தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

35 பவுண்கள் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.