சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு கடூழிச்றைத்தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

கடந்த 2012  ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் 45 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடும் கட்டத்தவறின் 6 ஆயிரம் ரூபா தண்டப்பணமும்  கட்டத்தவிறின் 3 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

குறித்த வழக்கானது சட்டமா அதிபரால் யாழ். மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த எதிரியான தந்தை தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இத் தீர்ப்பு வழங்கப்பட்டது.