இங்கிலாந்து அணிக்கெதிராக இடம்பெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று, இங்கிலாந்திடமிருந்த ஆஷஸ் கிண்ணத்தை பறித்தெடுத்துள்ளது.

 

இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற 5 ஆவதும் இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 4-0 எனக் கைப்பற்றியது.

பிரிஸ்பேனில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

அடிலெய்டில் இடம்பெற்ற 2 ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 120 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

பேர்த்தில் இடம்பெற்ற 3 ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணிய இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

மெல்பேர்ணில் இடம்பெற்ற 4 ஆவது போட்டி மாத்திரம் இங்கிலாந்து அணிக்கு நிம்மதியைகொடுத்த போட்டியாக அமைந்தது. இப் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில் இன்று சிட்னியில் இடம்பெற்று முடிந்த 5 ஆவதும் இறுதியுமான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.

இத் தொடரின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை, மெல்போர்ன் ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாகியதால் குக்கின் இரட்டைச் சதத்தின் உதவியுடன் போட்டி சமநிலையானது. இல்லையெனில் இங்கிலாந்து அணி வையிட்வொஷ் ஆகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.