சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இட்லிப் மாகாணத்திலுள்ள கிளர்ச்சியாளர்களின் நிலையத்தை இலக்குவைத்து நேற்று  இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த குண்டுத்தாக்குதல் தொடர்பாக அந் நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.