இலங்கை அணி விளை­யாடும் தொடர்­களில் இறுதி பதி­னொ­ரு­வரை முடி­வு­செய்யும் உரி­மையை தலைமைப் பயிற்­சி­யா­ள­ருக்கு வழங்கும் சட்­டத்தை நிறை­வேற்­றி­யுள்­ளது இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம். இதற்­காக நேற்று விசேட பொதுக்­கூட்­டத்தை கூட்டி இந்த முடிவு ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.

அத்­தோடு இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் புதிய செய­லா­ள­ராக விமா­னப்­ப­டையின் எயார் கொமடோர் ரொஷான் பியன்­வெ­லவும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

ஏற்­க­னவே செய­லா­ள­ராக இருந்த மொஹான் டி சில்வா உப தலை­வ­ரா­கவும், உள்ளூர் கிரிக்கெட் போட்­டி­களின் பிர­தா­னி­யா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இந்த விசேட பொதுக்­கூட்டம் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தில் நேற்றுக் காலை நடை­பெற்­றது. அதன்பின் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்த இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனத் தலைவர், பொது­க் கூட்­டத்தில் எட்­டப்­பட்ட முடி­வுகள் குறித்து அறி­வித்தார்.

இலங்கைக் கிரிக்கெட் அணி கடந்த காலங்­களில் கடும் பின்­ன­டைவை சந்­தித்து வந்­தது. இந்த பின்­ன­டை­வி­லி­ருந்து இலங்கை கிரிக்கெட் அணியை மீட்­டெ­டுக்க இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் புதிய தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக இலங்கை அணியின் முன்னாள் வீரரும், பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்­சி­யா­ள­ரு­மான சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கவை நிய­மித்­தது.

சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கவின் தலைமையின் கீழ் பயிற்­சி­களை மேற்­கொண்­டு­வரும் இலங்கை அணி எதிர்­வரும் 13ஆம் திகதி பங்­க­ளா­தே­ஷிற்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு ஒருநாள் முக்­ கோணத் தொடரில் விளை­யா­ட­வுள்­ளது.

பொது­வாக இலங்கைக் கிரிக்கெட் அணியை தேர்­வு­செய்யும் உரிமை தேர்­வுக்­கு­ழு­வுக்கே இது­வ­ரையில் இருந்­தது. 

தற்­போ­தைய புதிய திருத்­தத்­தின்­படி விளை­யாடும் பதி­னொ­ரு­வரை பயிற்­சி­யா­ளரும் சேர்ந்து தேர்­வு­செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதா­வது விளை­யாடும் பதி­னொ­ரு­வரை தெரிவு செய்யும் குழுவில் தலைமைப் பயிற்­சி­யாளர், அணித் தலைவர் மற்றும் அணி முகா­மை­யாளர் ஆகியோர் செயற்­ப­டுவர்.

இவர்கள் மூவரும் கலந்­தா­லோ­சித்து யார் யார் குறிப்­பிட்ட போட்­டிக்குத் தேவை என்­பதை முடி­வு­செய்வர்.

இதே­வேளை இந்த விசேட பொதுக்­கூட்­டத்தில் விளையாட்­டுத்­துறை அமைச்சர் வெளியிட்ட 2006/13 மற்றும் 2017/41 வர்த்­த­மானி அறி­வித்­தலின் படி குறித்த ஒழுங்­கு­வி­திகளை கிரிக்கெட் யாப்பில் உள்­ள­டக்­கவும் இதன்­போது முடி­வு­செய்­யப்­பட்­டது.