இரணைமடுவில் இன்று காலை இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

அறிவியல்நகர் இரணைமடுப்பகுதியில்  பட்டா வேன் ஒன்று  துவிச்சக்கர வண்டியுடன் மோதுண்டதில்  குறித்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த பாதுகாப்பு ஊழியர்  தலையில் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.