அடுத்த இலக்கு அமெரிக்காதான் வீடியோ மூலம் மிரட்டுகிறது ஐ.எஸ்.

19 Nov, 2015 | 10:57 AM
image

பாரி­ஸுக்கு நடந்­த­துதான் வாஷிங்­­ட­னுக்கும், சிரி­யாவில் தாக்­குதல் நடத்தும் மற்ற நாடு­க­ளுக்கும் நடக்கும் என்று மிரட்டும் வீடியோ ஒன்றை ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்பு நேற்று வெளி­யிட்­டுள்­ளது.

ISIS

கடந்த 14ஆம் திகதி நள்­ளி­ரவு பாரிஸில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் 129 பேர் பலி­யா­னார்கள். இந்த தாக்­கு­த­லுக்கு ஐ.எஸ். தீவி­ர­வாத இயக்கம் பொறுப்­பேற்­றது.

இந்­நி­லையில் பாரிஸில் நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கு பதி­லடி கொடுக்கும் வகையில் சிரி­யாவில் இருக்கும் முக்­கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் போர் விமா­னங்கள் குண்டுவீசி அதி­ரடி தாக்­குதல் நடத்தி வரு­கி­றது. பிரான்ஸ் தவிர அமெ­ரிக்கா, ரஷ்யா உள்­ளிட்ட நாடு­களும் அங்கு தாக்­குதல் நடத்தி வரு­கின்­றன.

இந்­நி­லையில், இந்­நா­டு­களை மிரட்டும் வீடியோ ஒன்றை ஐ.எஸ் தீவி­ர­வாத அமைப்பு நேற்று வெளி­யிட்­டுள்­ளது.

அந்த வீடி­யோவில் “சிரி­யாவில் நடந்து கொண்­டி­ருக்கும் கொடூ­ர­மான தாக்­கு­தலில் பங்­கேற்கும் நாடு­களே, கட­வுளின் ஆணைப்­படி பிரான்ஸின் மையப்­ப­கு­தி­யான பாரிசை எப்­படி தாக்­கி­னோமோ அதேபோல் அமெ­ரிக்­காவின் மைய­மான வாஷிங்­ட­னையும் தாக்­குவோம்” என்று ஒரு ஐ.எஸ் தீவி­ர­வாதி கூறுகிறார். ஐ.எஸ். அமைப்பின் இந்தப் புதிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17