முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் புதல்­வ­ரான யோஷித ராஜ­பக் ஷ தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சிறைக்­கூ­டத் தில் கைத்­தொ­லை­பேசி கண்­டு­பி­டிக்­கப்­பட்­ டமை தொடர்பில் உடன் விரி­வான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு இரண்டு நாட்­க­ளுக்குள் அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் ஆணை­யா­ள­ருக்கு பணிப்­புரை விடுத்­துள்ளார்.

இவ்­வி­டயம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

கால்டன் ஸ்போர்ட் நெட்வேர்க் நிறு­வ­னத்தில் இடம்­பெற்ற நிதி­மோ­சடி குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்டு வெலிக்­கடை சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டு ள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப க் ஷவின் புதல்­வ­ரான யோஷித ராஜ­பக் ஷ பயன்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் கைத்­தொ­லை­பேசி கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­கவும் வழ­மை­யாக சிறை­யி­ லி­ருக்கும் ஒரு­வ­ரி­டத்தில் இவ்­வா­றான பொருட்கள் கண்டு பிடிக்­கப்­பட்டால் அதற்கு முறை­யான விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் எனவும் அவ்­வாறு எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்­கப்­ப­டா­தி­ருப்­ப­தா­கவும் ஆங்­கில ஊட­க­மொன்றில் தகவல் வெளியி­டப்­பட்­டிருந்­தது. அவ்­வி­டயம் குறித்து அமைச்­சரின் கவ­ னத்­திற்கு கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து குறித்த விவ­காரம் தொடர்­பாக இரண்டு நாட்­க­ளுக்குள் முழுமையான விசார ணையொன்று நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணை யாளர் எச்.எம்.என்.சி.தனசிங்கவுக்கு அமைச் சர் பணிப்புரை விடுத்துள்ளார்.