கடலோரங்களை தூய்மைப்படுத்தும் புதிய திட்டம் ஒன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று களுவாஞ்சிகுடி கடற்கரை பிரதேசத்தில் பிரதேச சபையின் செயலாளர் கே.லக்ஷ்மிகாந்தன்  தலைமையில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் கடலோர பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட பிரதேச சபை ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பிரதேச சபைக்குட்பட்ட சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூர கரையோராம் இதன்போது சுத்தப்படுத்தப்பட்டது.

பிறந்திருக்கும் புதிய ஆண்டு முழுவதும் நடைமுறை படுத்தக்கூடிய வகையில்; இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் சுத்தமான சூழலை அனுபவிப்பதும் கடல்வளங்களை பாதுகாப்பதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும் என  செயலாளர் இதன்போது தெரிவித்தார்.