மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டுமென சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்கழுவின் விசாரணை அறிக்கை அண்மையில் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது.

அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை உள்ளடக்கி அண்மையில் விஷேட உரையொன்றை ஜனாதிபதி நிகழ்த்தியிருந்தார்.

இது தொடர்பில் அரசாங்கத்திற்குள்ளும் வெளியிலும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற நிலையில் இது தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்த வேண்டுமென பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளது.