பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜோன் யங், தனது 87வது வயதில் காலமானார். இதுவரை நிலவில் கால் பதித்திருக்கும் பன்னிருவரில் ஒன்பதாவது வீரர் இவர்!

அமெரிக்கக் கடற்படையின் சோதனை விமானங்களின் விமானியாகப் பணியாற்றியவர் 1965ஆம் ஆண்டு நாஸாவுக்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

1972ஆம் ஆண்டு தனது நான்காவது விண்வெளிப் பயணத்தின்போது நிலவில் கால் பதித்தார். அன்று முதல் இதுவரை ஆறு முறை விண்வெளிக்குச் சென்று திரும்பியிருக்கிறார் யங்!

விண்வெளியில் நடக்கும் வித்தையிலும் அனுபவம் வாய்ந்த இவர், விண்வெளியில் இருந்த தனது சக வீரருக்காக, அவரது மனைவி தயாரித்துக் கொடுத்த ‘செண்ட்விச்’சை எடுத்துச் சென்று அவரை ஆச்சரியப்படுத்தியவர்.

இதனால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானபோதும் திறமைசாலியான யங்கை விட்டுவிடாமல் நாஸா வைத்திருந்தது. இதனால், 42 ஆண்டு காலம் விண்வெளித் துறையில் யங் பணியாற்ற முடிந்தது.

யங் எப்போது, எதனால் இறந்தார் என்ற மிகச் சரியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.