தற்போது ஏற்பட்டுள்ள மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சியால் மகப்பேறின்மை என்பது ஒரு குறைபாடு மட்டுமே என்றும் அதற்கு எளிய தீர்வு உண்டு என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது. சென்ற தலைமுறையில் குழந்தையின்மை பிரச்சினைக்கு பெண்கள் தான் காரணம் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இன்று அந்த பிரச்சினைக்கு ஆண்கள் முப்பது சதவீதம் பெண்கள் முப்பது சதவீதம் இருவருக்கும் பொதுவாக இருக்கும் ஆரோக்கிய குறைபாடுகள் முப்பது சதவீதம் பரிசோதனைகளின் மூலமாக மட்டுமே கண்டறியப்படக்கூடும். காரணங்கள் பத்து சதவீதம் என்று ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தமது புகையிலை பயன்பாடு, அவரவர் களுடைய உடல் வெப்ப நிலைக்கு ஏற்ப பணியாற்றாமல் அதிகமாக வெப்பம் மிகுந்த இடத்தில் பணியாற்றுவது, நீரிழிவு நோயிற்கு ஆளாகியிருப்பது, இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டில் ஏற்படும் கோளாறுகள், உடற் பருமன், ஒவ்வாமையை ஏற்படுத்தும் வேதிப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவது, அணுக்கதிர்வீச்சு தாக்கமுள்ள பகுதிகளில் வசித்தல், வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொள்வது, காலங்கடந்த திருமணம், கருகலைப்பை மேற்கொள்வது என சிலவற்றை குழந்தையின்மைக்கான காரணமாக பட்டியலிடலாம்.’ என்ற தகவலை பகிர்ந்து கொண்டே எம்முடன் பேசத் தொடங்குகிறார் டொக்டர் தனபாக்கியம். இவர் கோவையில் இயங்கி வரும் சுதா டெஸ்ட் ட்யூப் பேபி மையத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.
செயன்முறை கருத்தரிப்பு குறித்த மருத்துவ விளக்கம்
இயற்கையாகவே கருத்தரிக்க இயலாத நிலையிருக்கும் தம்பதிகளின் வாரிசு கனவை நனவாக்குவதற்காக மருத்துவத்துறை கண்டறிந்த நவீன சிகிச்சை தான் செயன்முறை கருத்தரிப்பு. தம்பதிகளின் உடல் நிலை, உயிரணுக்களின் நிலை, கருமுட்டையின் நிலை ஆகியவற்றைப் பொருத்து ஐ.வி.எப்., இக்ஸி, இம்சி உள்ளிட்ட பல முறைகளில் இந்த செயன்முறை கருத்தரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
ஐ.வி.எப்., இக்ஸி மற்றும் இம்சி குறித்து விளக்குக..?
உடலுக்கு வெளியே செயற்கையான முறையில் நிகழ்த்தப்படும் கருக் கூட்டலே ஐ.வி.எப். எனப்படும். இயல்பை விட குறைவான உயிரணுக்களைக் கொண்ட ஆண்கள், கருக்குழாயில் அடைப்பு மற்றும் சிக்கல்களைக் கொண்ட பெண்கள், ஒழுங்கற்ற முறையில் மாதவிடாய் சுழற்சியுள்ள பெண்கள்,ஹோர்மோன் சுரப்பிகளின் சமச்சீரற்ற தன்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள் ஆகியோர் இவ்வகையினதான சிகிச்சைக்கு பொருத்தமானவர்கள். அதே போல் இக்ஸி முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மாற்றியமைத்துக் கொண்ட வாழ்க்கை நடைமுறை, தோல் மற்றும் மருந்து கம்பனிகளில் பணியாற்றும் நபர்கள், புகைப் பிடிப்போர், மது அருந்து வோர், தொடர்ந்து ஒரேயிடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்கள், மடிக்கணினியை அதிகளவில் பயன்படுத்துபவர்கள் ஆகியோர்களுக்கு அவர்களின் உடல் வெப்ப நிலையைக் காட்டிலும் கூடு தலான வெப்ப நிலையில் தொடர்ந்து இயங்குவதால் அவர்களின் உயிரணு உற்பத்தி மற்றும் அதன் வீரியத்தன்மை பாதிக்கப்படுகிறது. இவர்களுக்கு ஐ.வி.எப். என்ற சிகிச்சை பெருமளவில் பலனளிப்பதில்லை. இவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் இக்ஸி. இம்முறையில் மிகக்குறைவான எண்ணிக்கையில் உயிரணுக்களைக் கொண்ட ஆணிடமிருந்து ஒரேயொரு ஆரோக்கியமான உயிரணுக்களை ஊசி மூலம் எடுத்து வெளியே எடுக்கப்பட்ட கருமுட்டையில் நேரடியாக செலுத்தி கருக்கட்டலுக்காக ஆராய்ச்சிக்கூடத்தில் வைக்கப்படும். பின்னர் அதனை எடுத்து பெண்ணின் கருப்பையில் வைத்துவிடுவார்கள்.
இதனைத் தொடர்ந்து ஆணின் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்களுக்கு இக்சி முறையில் பலனளிக்கவில்லை என்ற நிலை ஏற்பட்ட போது இம்சி அதாவது (Intracytoplasmic Morphologically Selected Sperm Injection) எனப்படும் சிகிச்சை முறை கண்டறியப்பட்டது. இதன் போது குறைவான எண்ணிக்கையில் உள்ள ஆணிடமிருந்து பெறப்படும் உயிரணுக்கள் நவீன தொலைநோக்கிகள் மூலம் ஆறாயிரம் முறை பெரிதாக்கப்பட்டு, அவை பரிசோதிக்கப்பட்டு, அவற்றில் ஆரோக்கியமான ஒரேயொரு உயிரணுவைத் தெரிவு செய்து, அதனை எடுத்து கருக்கட்டலுக்காக பயன்படுத்துவார்கள். இதனால் அவர்களுக்கு கருக்கட்டல் நல்லமுறையில் நடைபெறுகிறது. அதே சமயத்தில் இம்சி சிகிச்சையில் குறைவான உயிரணுக்களின் செயல்பாடு, தோற்றம், அதன் வீரியம் குறித்தும் முழுமையாக ஆய்வு நடத்தப்படுகிறது. இதனால் இம்சி முறையில் செயன்முறை கருத்தரிப்பு வெற்றிகரமாக பலனளிக்கிறது.
இந்த முறையின் வெற்றி வீதம் குறித்து..?
இதனை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மருத்துவ பேராசிரியர் பார்த்துவ் என்பவர் 2002 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். 2006 ஆம் ஆண்டில் இந்த முறை பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டு அதன் வெற்றி வீதம் கண்டறியப்பட்டது. அதன் பிறகு இது உலகம் முழுவதும் பிரபலமானது. அண்மையில் இலங்கையைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் குழந்தையின்மை பிரச்சினைக்காக எங்களுடைய மருத்துவமனையின் உதவியை நாடினார்கள். அவர்களுக்கு இக்ஸி முறையை விட இம்சி முறை தான் சரியாக இருக்கும் என்பதை அவர்களிடம் மேற்கொண்ட பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டு, இம்சி முறையிலான செயன்முறை கருத்தரிப்பு சிகிச்சையை தொடங்கினோம். கருவை உருவாக்கி, அதனை உறுதி செய்து, இரண்டு மாத சிகிச்சை மற்றும் கண்காணிப்பிற்கு பிறகு அவர்களை இலங்?கைக்கு அனுப்பி வைத்தோம். கடந்த ஆண்டின் இறுதியில் அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த செய்தி, எங்களுடைய மருத்துவமனையில் இம்சி முறையில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட கரு வெற்றிப் பெற்றதில் அந்த பெற்றோர்களைக் காட்டிலும் எங்களுக்கும் கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் இந்த மையம் குழந்தையில்லாத தம்பதிகளின் நம்பிக்கையான மருத்துவமனையாக தொடர்ந்து செயல்பட்டு வருவதிலும் அடுத்த கட்ட சந்தோஷத்தைப் பெற்றிருக்கிறோம். அத்துடன் இம்சி என்ற சிகிச்சை முறையும் வெற்றி வீதத்தை அளிக்கும் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறோம்.
இம்சியை யாருக்கு பரிந்துரை செய்வீர்கள்?
பொதுவாக ஐ.வி.எப். என்ற சிகிச்சை பெண்களுக்கானது என்றும், இக்ஸி என்பது ஆண்களுக்கானது என்றும் மருத்துவத்துறையில் கருத்து உண்டு.அதே போல் ஐ.வி.எப்பைக் காட்டிலும் இக்சியில் தான் வெற்றி வீதம் அதிகம் என்றும் சொல்வார்கள். இந்நிலையில் இக்சி முறையில் முயற்சி செய்து எதிர் மறையான பலனைப் பெற்றவர்கள், குறைவான உயிரணுக்களைக் கொண்ட ஆண்கள், இக்சி முறை பலனை அளிக்க வில்லை என்றால் இம்சி முறையை தெரிவு செய்யலாம். இம்முறையில் ஆணிடமிருந்து பெறப்படும் குறைவான உயிரணுக்களை டிஜிற்றல் முறையில் ஆறாயிரம் மடங்கு பெரிதாக்கி உற்றுநோக்குவதால், அதில் எந்த உயிரணு ஆரோக்கியமானதாகவும், வீரியமிக்கதாகவும், உயிரணுவின் தோற்றம் மற்றும் செயல்பாட்டில் குறைபாடு இல்லாததாகவும் இருக்கிறது என்பதை துல்லிஸயமாக கண்டறிய இயலும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண் 0091 98941 20270 மற்றும் மின்னஞ்சல் முகவரி sudhainfertility@gmail.com
–சந்திப்பு: திவ்யா .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM