பிரபல வர்த்தகரும் சமூக சேவையாளரும் மொரீஷியஸ் தீவுகளுக்கான கௌரவ தூதுவருமான தெய்வநாயகம்பிள்ளை ஈஸ்வரன் சில மணி நேரங்களுக்கு முன் சிங்கப்பூரில் காலமானார்.

அன்னார் பிரபல வர்த்தகர் காலஞ்சென்ற தெய்வநாயகம்பிள்ளையின் மகனாவார். தனது சேவைகளுக்காக நாட்டின் உயர் பட்டங்கள் பலவற்றையும் பெற்றவர்.

வர்த்தக நடவடிக்கைகளுக்கு நிகராக ஆன்மிகப் பணிகள் மற்றும் சமூகத் தொண்டுகள் பலவற்றிலும் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வந்த ஈஸ்வரன், சில காலங்களாக சக்கர நாற்காலியில் அமர்ந்தவண்ணம் தனது நடவடிக்கைகளை இடையறாது மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.