யாழ் வல்வெட்டித்துறை கடற்கரைப் பகுதியில், 90 கிலோ எடையுடைய கேரள கஞ்சா, நான்கு கிலோ ஹாஷிஷ் மற்றும் 4 கிலோ அபின் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

தமக்குக் கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தியபோதே மேற்படி போதை மருந்துகளை மீட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை துறைமுகப் பகுதியில், தகவல் ஒன்றின் அடிப்படையில் சோதனையிட்ட கடற்படையினர், சட்ட விரோதமான முறையில் திருக்கைவால் சுறா ஒன்று விற்கப்படவிருந்ததைக் கண்டுபிடித்தனர்.

சுமார் நாற்பத்தைந்து கிலோ எடையுள்ள இந்த சுறாவை விற்க முயன்ற நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.