ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் இலங்கை விஜ­யத்தில் அவரின் நகர்­வுகள் எவ்­வாறு அமைந்­துள்­ளன என்­பதை விடவும் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வை யில் இலங்கை தொடர்பில் எவ்­வா ­றான அறிக்கையை வெளி­யிடப் போகின்றார் என்­ப­தி­லேயே சிக்கல் உள்­ளது என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா தெரி­வித்தார்.

இலங்­கையின் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றை­களில் சர்­வ­தேச தலை­யீ­டு­க­ளுக்கு இட­ம­ளிக்கக் கூடாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­தி­களை நடை­மு­றைப்­ப­டுத்தி உண்­மை­களை கண்­ட­றி­யவும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணவும் முயற்­சிக்க வேண்டும். காலத்தை கடத்தி கொடுத்த வாக்­கு­று­தி­களை நடை­மு­றைப்­ப­டுத்­தாது செயற்­ப­டு­வது தொடர்ந்தும் சிக்­கல்­களை ஏற்­ப­டுத்தும் வகையில் அமையும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் பல­த­ரப்­பட்ட நபர்­களை சந்­தித்தும் பொது­மக்­களை சந்­தித்தும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இந்­நி­லையில் அவ­ரது வருகை இலங்­கையில் எவ்­வா­றான தாக்­கத்தை உரு­வாக்கும் என வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருப்­பது எதற்­காக என்­பது தொடர்பில் எம்மால் கருத்து தெரி­விக்க முடி­யாது. எனினும் அவர் வரு­வதை தடுக்­கவோ அல்­லது இந்த விடயம் தொடர்பில் விமர்­சனம் முன்­வைக்­கவோ முடி­யாது. இலங்கை ஐக்­கிய நாடுகள் சபை­யுடன் ஒன்­றி­ணைந்து செயற்­படும் நாடு என்­பதால் அவர்­களின் செயற்­பா­டு­களை நாம் ஏற்று அதற்­கேற்ப சில ஒத்­து­ழைப்­பு­க­ளுடன் செயற்­ப­ட­வேண்­டிய அவ­சியம் உள்­ளது.

மேலும் அவரின் விஜயம் சாத­க­மாக அமைந்­துள்­ளது என்­பதை ஊட­கங்­களின் கருத்­துகள் மூல­மாக அறிந்­து­கொள்ள முடி­கின்­றது. அதேபோல் அவர் வடக்கில் பொது­மக்­களை சந்­தித்­துள்­ளமை, தமிழ் தலை­மை­களை சந்­தித்­துள்­ளமை மற்றும் அரச பிர­தி­நி­தி­களை சந்­தித்­துள்­ளமை என்­பன நல்ல விட­ய­மாகும். இலங்­கையில் அவர் மேற்­கொள்ளும் நகர்­வுகள் அனை­வ­ரையும் திருப்­திப்­ப­டுத்தும் வகையில் அமைந்­துள்­ளது என கூறு­கின்­றனர்.

ஆனால் இலங்­கையில் அவரின் நகர்­வுகள் எவ்­வாறு என்­பது முக்­கி­ய­மா­ன­தல்ல. இலங்­கையில் இருந்து செல்லும் அவர் ஐக்­கிய நாடுகள் மனித்து உரி­மைகள் பேர­வையில் எவ்­வா­றான வகையில் செயற்­படப் போகின்றார். அவர் என்ன வித­மான அறிக்­கையை இலங்கை தொடர்பில் வெளி­யிடப் போகின்றார் என்­ப­தி­லேயே சிக்கல் உள்­ளது. அதேபோல் உள்­ளக செயற்­பா­டு­களில் அவர்­களின் தலை­யீடு எவ்­வாறு அமைந்­துள்­ளது என்­ப­திலும் சிக்கல் உள்­ளது. இலங்­கையின் உள்­ளக பொறி­மு­றை­களை சர­வ­தேசம் கையாள்­வதை நாம் விரும்­ப­வில்லை .

மேலும் இன்றும் வடக்கு கிழக்கு மக்­களை அவர் சந்­தித்த போது மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் அவரால் அறிந்­து­கொள்ள முடிந்­துள்­ளது. காணாமல் போனோர், கடத்­தப்­பட்டோர் மற்றும் அப­க­ரித்த காணிகள் என்­ப­வற்றை விடு­விக்­கக்­கோ­ரியே மக்கள் புலம்பி வரு­கின்­றனர். இந்த நிலைமை இன்று நேற்று அல்ல யுத்தம் முடி­வுக்கு வந்­ததில் இருந்தே இருக்­கின்­ற­னது.

எனவே இன்றும் இலங்­கையின் உள்­ளக விவ­கா­ரங்­களில் சர்­வ­தேச தலை­யீடு உள்­ளது என்றால், ஆட்சி மாற்­றத்தின் பின்­னரும் இலங்கை தொடர்பில் சர்­வ­தேசம் சந்­தேகக் கண்­ணோடு அவ­தா­னிக்­கின்­றது என்றால் அதற்­கான முழு பொறுப்­பையும் அர­சாங்­கமே ஏற்­றுக்­கொள்ள வேண்டும். அர­சாங்­கத்தின் கண்­மூ­டித்­த­ன­மான செயற்­பா­டுகள் மற்றும் சிறு­பான்மை மக்கள் மீதான அக்­க­றை­யற்ற போக்­குமே இன்றும் தமிழ் மக்கள் தமது புலம்­பல்­களை சர்­வ­தேச மட்­டத்தில் தெரி­விக்க வேண்­டிய நிலையை உரு­வாக்­கி­யது.

எனவே பிரச்­சி­னை­களில் இருந்து விடு­பட வேண்­டு­மாயின் முதலில் பிரச்­சி­னைக்­கான கார­ணத்தை கண்­ட­றிய வேண்டும். சர்­வ­தேச அழுத்­தங்­களும் சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­மு­றையும் இலங்­கையில் காணப்­ப­டு­வ­தெனின் அதற்­கான காரணம் என்­ன­வென்­பதை அர­சாங்கம் அறிந்­து­கொள்ள வேண்டும். யுத்­தத்தின் பின்னர் இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட சமூ­கத்தை கவ­னத்தில் கொள்­ளாது அப்­ப­டியே கைக­ழு­வி­விட்­ட­மையே இன்று வரையில் நாம் பிரச்­சி­னை­களை சந்­திக்க கார­ணி­யாக அமைந்­துள்­ளது.

எனவே இப்­போ­தா­வது அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­தி­களை நடை­மு­றைப்­ப­டுத்தி உண்­மை­களை கண்­ட­றி­யவும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணவும் முயற்­சிக்க வேண்டும். காலத்தை கடத்தி கொடுத்த வாக்­கு­று­தி­களை நடை­மு­றைப்­ப­டுத்­தாது செயற்­ப­டு­வது தொடந்தும் சிக்­கல்­களை ஏற்­ப­டுத்தும் வகையில் அமையும். எனவே அர­சாங்கம் அதை கவ­னத்தில் கொண்டு செயற்­பட வேண்டும்.

அதேபோல் இப்­போதும் சர்­வ­தேசம் தமது தேவை­களை பூர்த்­தி­செய்யும் வகையிலேயே தமது நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. யுத்த குற்றச்சாட்டுகள், காணாமல் போனோர் தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் தொடர்பிலும் மாத்திரம் கதைப்பவர்கள் வடக்கு கிழக்கு மக்களின் யதார்த்த பூர்வமான பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விவகாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதை தவறென கூற முடியாது. எனினும் அதையும் தாண்டி அவர்களின் வாழ்வாதாரம், அடிப்படை சிக்கல்களை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.