மடு தேவா­ல­யத்­திற்கு அருகில் பௌத்த விகாரை அமைப்­பதை தடுத்து நிறுத்­தவும்

Published By: Priyatharshan

06 Jan, 2018 | 12:21 PM
image

மன்னார் மடு தேவா­லய நுழை­வாயில் அரு­கா­மையில் இரா­ணுவத்தி­னரால் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த விகாரை ஒன்றை அமைப்­ப­தற்கும் எடுக்கும் முயற்­சியை உட­ன­டி­யாக தடுத்து நிறுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கூறி மன்னார் பிர­ஜைகள் சங்­கங்கள் இரண்டு வட மாகாண கல்வி மற்றும் கலா­சார அமைச்­ச­ருக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்­வைத்­துள்­ளன. 

இந்த இடத்தில் சிற்­றுண்­டி­ச்சாலை ஒன்றை நடத்­தி­வரும் இரா­ணுவத்தினர் குறித்த இடத்தில் உள்ள மரத்­திற்கு கீழ் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த விகாரை ஒன்றை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொண்டு வரு­வ­தாக கூறும் மன்னார் பிர­ஜைகள் சங்கங்கள் இந்த இடத்தில் இவ்­வா­றான செயலை செய்ய ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. அது மடு தேவா­ல­யத்­திற்கு செய்யும் மிகப் பெரிய அவ­ம­ரி­யாதை எனவும் குறிப்­பிட்­டுள்­ளன. 

இப்­போ­தைக்கும் இவ்­வி­டத்தை வணக்க வழி­பா­டுகள் நடத்தும் இட­மாக இரா­ணுவத்தினர் மாற்­றி­யுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ள பிர­ஜைகள் சங்கங்கள் பிர­பல கிறிஸ்­தவ தேவா­லயம் உள்ள இடத்தில் இவ்­வா­றான செயலை அனு­ம­திக்க முடி­யாது என குறித்த கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

வடக்கில் பல இடங்­களில் புத்தர் சிலை­களை வைத்து வணக்க வழி­பா­டுகளில் ஈடு­ப­டு­கின்ற இரா­ணுவத்தினர், அவ்­வி­டத்தை விட்டு செல்லும் போது, சிலை­களை அகற்­றாமல் செல்­வதன் மூலம் ஏற்­ப­டு­கின்ற பிரச்­சினை, தேசிய ரீதி­யான பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுப்­பதால் இந்த இடத்தில் புத்தர் சிலையை வைப்­ப­தற்கு முன்னரே இச்செயற்பாட்டை நிறுத்தநடவடிக்கை எடுக்குமாறு மன்னார் பிரஜைகள் சங்கங்கள் இரண்டும் வட மாகாண சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08
news-image

உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது...

2026-07-19 20:31:38
news-image

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை...

2026-07-19 20:19:28
news-image

அனுமதிப் பத்திரமின்றி 1000 பஸ்கள் சேவையில்...

2026-07-19 15:59:20
news-image

ஒக்டோபர் 8 முதல் துவாய்கள், நெப்கின்களுக்கு...

2026-07-19 19:50:35
news-image

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50...

2026-07-19 18:52:55
news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55