வடகொரியா ஏவிய ஏவுகணையொன்று, தவறுதலாக வடகொரிய நகரிலேயே விழுந்து வெடித்ததில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

பியோங்யாங்கில் இருந்து கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி ஏவப்பட்ட மத்திய தூர ஏவுகணையொன்று தவறுதலாக வடகொரியாவின் டொக்ச்சோனில் விழுந்து வெடித்திருப்பது செய்மதிப் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

‘ஹ்வாசோங் கேஎன் 17’ என்று பெயரிடப்பட்ட இந்த ஏவுகணையின் என்ஜின்களுள் ஒன்று, ஏவப்பட்ட சிறிது நேரத்தில் இயங்க மறுத்ததிலேயே இந்த விபத்து இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 2 இலட்சம் பேர் வாழும் இந்த நகரில், தெய்வாதீனமாக விவசாய மற்றும் தொழிற்பேட்டைப் பகுதியொன்றில் விழுந்ததால் அதிக உயிர்கள் பலியாவது தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.