ஈ.பி.டி.பி. கட்­சியின் முன்னாள் யாழ். மாந­கர சபை உறுப்­பி­னரும் தற்­போ­தைய யாழ்.மாந­கர சபை வேட்­பா­ள­ரு­மான சுதர்சிங் விஜ­யகாந்த் உள்­ளிட்ட நால்வர் மீது முன்­வைக்­கப்­பட்ட 116 பவுண் திருட்டு நகை­களை உட­மையில் வைத்­தி­ருந்­தமை மற்றும் அவற்றை அடகு வைக்க முயற்­சித்தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்களில் அவர்­களை குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கண்டு யாழ்ப்­பாணம் நீதிவான் நீதி­மன்றம் கடந்த வியா­ழக்­கி­ழமை தீர்ப்­ப­ளித்­துள்­ளது. 

2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் வங்கி யொன்றில் அடகு வைப்­ப­தற்கு  சுதர்சிங் விஜ­யகாந்த் சென்­றி­ருந்தார். அந்­த­ வங்­கியில் கட­மை­யாற்றும் அலு­வ­லரின் திரு­ட்டுப்போன நகை சுதர்சிங் விஜ­ய­காந்­திடம் காணப்­ப ட்­டது. அது­தொ­டர்பில் கோப்பாய் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது.

இது தொடர்பில் விசா­ர­ணை­க­ளை ­முன் ­னெ­டுத்த யாழ்ப்­பாண பொலிஸார் விஜ­ய காந்த் உள்­ளிட்ட நான்­கு­பேரை கைது செய்­தனர். தொட­ர்ச்­சி­யாக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட சந்­தே­க­ந­பர்கள் நான்­கு­பேரும் பிணையில் விடு­விக்­கப்­பட்­டனர். விஜயகாந்­த் ­உள்­ளிட்ட நான்­கு பேர் மீதும் 116 பவுண் நகை­களை திரு­டி­யமை உள்­ளிட்ட நான்கு குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து கோப்பாய் பொலிஸார் நீதி­மன்­றத்தில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­

தி­ருந்­தனர். இத­ன­டிப்­ப­டையில் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வந்­த­நி­லையில் நேற்று முன்­தினம் தீர்ப்­புக்­காக திக­தி­யி­ட ப்­பட்­டது.  சந்­தே­க­ந­பர்கள் நால்வர் மீதான திருட்டு குற்­றச்­சாட்டு நியா­ய­மான சந்­தே­கங்­க­ளுக்கு அப்பால் நிரூ­பிக்­கப்­ப­ட வில்லை.  சந்­தே­க­ந­பர்கள் திருட்டு நகை­களை உட மையில் வைத்­தி­ருந்­தமை மற்றும் அவற்றை அட­கு­வைக்க முற்­பட்­டமை உள்­ளி ட்ட குற்­றச்­சாட்­டுக்கள் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளன. இதை­ய­டுத்து நான்கு குற்­ற­வா­ளி­க­ளுக்­கு­மான தண்­டனை தீர்ப்பு எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் முதலாம் திகதி வழங்­கப்­படும் என யாழ்ப்­பாணம் நீதி­மன்ற நீதி வான் சின்­னத்­துரை சதீஸ்­தரன் தெரி­வித்தார். 

விஜ­ய­காந்தின் இந்த நட­வ­டிக்­கையால் அவரை தமது கட்­சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஈ.பி.டி.பி. நீக்கியது. இதனால் அவர் முற்போக்கு தமிழ் தேசிய  கட்சியை ஆரம்பித்தார். தற்போது அவரது கட்சி தமிழர் விடுதலை கூட்ட ணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் யாழ். மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடுகிறது.