மட்டக்களப்பு, ஏறாவூர் - புன்னகுடா கடலில் மாணவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வேறு சில மாணவர்களுடன் குறித்த மாணவனும் கடலில் நீராடச் சென்றபோதே இவ்வனர்ததம் இடம்பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் சக மாணவர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போது குறித்த மாணவன் காணாமல்போயுள்ளார்.

இதையடுத்து காணாமல்போன மாணவனை பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடியும் கிடைக்காத நிலையில், குறித்த மாணவனது சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்தவர் 15 வயதுடைய ஏறாவூரைச் சேர்ந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.