கரும்புள்ளி துடைக்கப்பட்டுவிட்டது: சபாநாயகர்

Published By: Devika

06 Jan, 2018 | 09:19 AM
image

மனித உரிமைகளைக் காக்கும் ஒரு நாடாக இலங்கை மிளிர்வதை சர்வதேசமுமே ஏற்றுக்கொண்டிருக்கிறது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இலங்கை மனித உரிமைகள் சம்மேளனத்துக்கு விஜயம் செய்த அவர், அங்கு பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

“முன்னொரு காலத்தில் மனித உரிமைகள் குறித்த கடும் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை முகங்கொடுத்து வந்தது. அதேவேளை, சிறந்த அரசு ஒன்றுக்கான தேவையும் மிகக் கடுமையாக உணரப்பட்டு வந்தது. தற்போதைய நல்லாட்சி அரசின் பதவியேற்புடன் அந்தக் கரும்புள்ளி துடைக்கப்பட்டிருக்கிறது.

“சில நாட்களுக்கு முன் சர்வதேச நாடுகளின் பங்கேற்புடன் மனித உரிமைகள் குறித்த மாநாடு நடத்தப்படத் தீர்மானிக்கப்பட்டது. பல ஆசிய நாடுகள் பங்கேற்கவிருந்த இந்த மாநாட்டை நடத்தும் கௌரவம் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தது. காரணம், இலங்கையில் இன்று மனித உரிமைகள் பேணப்பட்டு வருவதே.

“நமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது வெளிநாட்டு விஜயங்களின்போது, சிறந்த ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்பியிருப்பது போன்ற அம்சங்கள் குறித்து பாராட்டுப் பெற்று வருகின்றனர். இது இந்த நல்லாட்சியின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.”

இவ்வாறு சபாநாயகர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11