தேசிய அரசாங்கமா? நாட்டின் எதிர்காலமா? என்று வந்தால் நிச்சயம் நாட்டின் நலன் கருதியே செயற்படுவோம். எனவே, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பேப்பச்சுவல் நிறுவனத்தின் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஆதரவையும் பாராளுமன்றத்தில் சுதந்திர கட்சி வழங்கும். எனவே மோசடிக்காரர்கள் தப்பிக்க வாய்ப்பில்லை. பொறுப்பு கூறும் விடயத்தில் இருந்து யாரும் தப்பிக்கவும் முடியாது. குற்றநிலையை உணர்ந்து ரவி கருணாநாயக்க பதவி விலகினார். அர்ஜுன மகேந்திரனை பதவியில் அமர்த்தியவரை விலகுமாறு எம்மால் கூற முடியாது எனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதன் போது உரையாற்றிய கட்சியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த கூறுகையில் ,
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் 10 ஆம் திகதி புதன் கிழமை அநுராதபுரத்தில் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் கிழக்கில் பங்காளி கட்சிகளுடன் கூட்டணியமைத்து தேர்தலில் போட்டியிட உள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தேசிய அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தும் வகையில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை அமைந்துள்ளது.
அந்த அறிக்கையில் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஜனாதிபதியும் விஷேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். 2015 ஆம் ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடி தேசிய பொருளாதாரத்திற்கு பாரியளவில் தாக்கம் செய்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது அதனை தடுக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளும் காணப்பட்டன.
மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தை எளிதாக கருத முடியாது . அந்த மோசடி சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் பல தயார்ப்படுத்தல்கள் காணப்பட்டுள்ளன. 1973 ஆம் ஆண்டிற்கு பின்னர் நிதியமைச்சின் நிர்வாக கட்டமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. நிதி அமைச்சின் கீழ் காணப்பட்ட திறைசேரி, சுங்கம் , நிதி திட்டமிடல் மற்றும் மத்திய வங்கி ஆகிய துறைகள் மற்றொரு அமைச்சுக்கும் மாற்றப்பட்டன. அதாவது நிதி திட்டமிடல் மற்றும் மத்திய வங்கி ஆகிய துறைகள் அரச தொழில் முயற்சி மற்றும் அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன.
இதனாலேயே முன்னாள் நிதி அமைச்சர் மத்திய வங்கி எனது அமைச்சின் கீழ் இல்லை என பிரச்சினையிலிருந்து தப்பிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் நாட்டிற்கு ஏற்பட்ட பாரிய இழப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுதந்திர கட்சியின் நிலைப்பாடாகும். மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் ஒருவரை நியமிக்காமல் பிணைமுறி விவகாரம் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டிருந்தால் உண்மைகள் வெளிவந்திருக்காது.
தேசிய பொருளாதாரத்தின் கேந்திர நிலையமான மத்திய வங்கிக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்பிற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். இதனடிப்படையில் அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அனைத்து சாட்சி விசாரணைகளையும் சட்டமாதிபர் திணைக்களம் முன்னெடுத்தமையினால் நீதிமன்ற நடவடிக்கைக்கு தாமத நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை.
எனவே முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பேப்பச்சுவல் நிறுவனத்தின் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு தேவைப்படின் கடந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் வகையில் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் பாராளுமன்றத்தில் சுதந்திர கட்சி வழங்கும். எனவே மோசடிக்காரர்கள் தப்பிக்க வாய்ப்பில்லை. பொறுப்பு கூறும் விடயத்தில் இருந்து யாரும் தப்பித்து விட முடியாது. குற்றநிலையை உணர்ந்து ரவி கருணாநாயக்க பதவி விலகினார். அர்ஜுன மகேந்திரனை பதவியில் அமர்த்தியவரை விலகுமாறு எம்மால் கூற முடியாது. ஆனால் தேசிய அரசாங்கமா ? நாட்டின் எதிர்காலமா ? என்று வந்தால் நிச்சயம் நாட்டின் நலன் கருதியே செயற்படுவோம் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM