ராஜகிரியவில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் பணிகள் நிறைவுறுவதையடுத்து, எதிர்வரும் திங்களன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் அந்தப் பாலம் திறந்து வைக்கப்படவிருக்கிறது. 

இது குறித்து முக்கிய கருத்து வெளியிட்டிருக்கும் ‘ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா’ அமைப்பின் பொது வளங்கள் பாதுகாப்புப் பிரிவு, மேற்படி பாலத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில், எந்தவொரு கட்சியின் தலைவர்களோ, பிரதிநிதிகளோ கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், மேற்படி பாலத்தின் திறப்பு விழாவில் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டால் அது தேர்தல் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறும் செயலாகக் கருதப்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதை முன்னிட்டு, திறப்பு விழாவில் எந்தவொரு அரசியல் கட்சியினது பங்கேற்பும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் அது கேட்டுக்கொண்டுள்ளது.