ஆர்னல்ட் ஷ்வாஸ்னேகரின் ‘டேர்மினேட்டர்’படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதில், காயப்படும் இயந்திர மனிதன் உடனே தானாகவே தனது காயங்களை ஆற்றிக்கொள்வது போல் காட்சியமைக்கப்பட்டிருக்கும். இது, அந்தக் காலத்தில் கற்பனையாக இருந்தாலும் வெகுவிரைவில் அது நடைமுறைக்கு வந்துவிடும் போல் தெரிகிறது.

இயந்திர மனிதர்களுக்குப் பொருத்துவதற்காகவென்றே செயற்கைத் தசைநார்களை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகிறார்கள். 

இது இயந்திர மனிதர்களுக்கானது என்றாலும் உறுதியான அதே நேரம், மென்மையானதாகவும் அமையவிருக்கிறது.

சாதாரண மனிதர்களது தசைநார்களைப் போல் அல்லாது, இயந்திர மனிதர்களின் வேகத்துக்கும் அதீத செயற்பாடுகளுக்கும் ஏற்ப இயங்கும் வகையில் இது இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதையெல்லாம்விட மற்றொரு முக்கியமான அம்சம், எந்தக் காயமாக இருந்தாலும் தானாகவே ஆறிவிடவும் சேதமடைந்த தசைநார்கள் மீண்டும் தாமாகவே வளர்ந்துவிடவும் கூடிய வகையில் இது அமையப்போகிறது என்பதுதான்!