(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத்தின் மீது எதிர்கட்சிகள் மற்றும் இடதுசாரிகட்சிகள்  குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதென சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மதஅலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

ச.தோ.ச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மானிய விலையிலேயே மக்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் விநியோகிக்கின்றன.

ஜனாதிபதியும்,பிரதமரும் நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கும் விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

கடந்த சில காலங்களில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் காரணமாகவே குறித்த பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

வெலிசரயில் இன்று பிரதமர் தலைமையில் இடம் பெற்ற ச.தொ.ச விற்பனை நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.