வேட்பாளர்களைப் பிரபலப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் வகையில் ஆன்மீக செயற்பாடுகள் நடத்தப்பட்டாலோ அல்லது ஆன்மீகத் தலங்களில் தேர்தல் உறுதிமொழிகள் வெளியிடப்பட்டாலோ, குறித்த வேட்பாளர் மீதும் குறித்த ஆன்மீகத் தலங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

தேர்தல் திணைக்களத்தில் இன்று (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேஷப்ரிய இதைத் தெரிவித்தார்.

“நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டிருக்கும் கட்சி அலுவலகங்கள், விளம்பரப் பதாகைகள், கட்-அவுட்கள், சுவரொட்டிகள் என்பனவற்றை இம்மாதம் 31ஆம் திகதிக்குள் அகற்றிவிட வேண்டும்.

“குறித்த கால எல்லைக்குள் அலுவலகங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட்-அவுட்களை அகற்றப்படாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

“மேலும் எதிர்வரும் இருபதாம் திகதிக்கு முன் வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்” என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.