யால தேசியப் பூங்காவைப் பார்வையிட அனுமதிக்கப்படும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடனான கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் நாளொன்றுக்கு பார்வையாளர்கள் அடங்கிய 500 வாகனங்களுக்கு மட்டுமே காட்டுப் பூங்காவினுள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் யாலவுக்கான பயணத் திட்டத்தை முன்கூட்டியே முடிவு செய்ய முடியாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது எடுக்கப்பட்டிருக்கும் புதிய முடிவின்படி நாளொன்றுக்கு 600 வாகனங்கள் அனுமதிக்கப்படவுள்ளன. இதன்மூலம் நாளொன்றுக்கு மேலதிகமாக குறைந்தபட்சம் 400 பேர் அனுமதிக்கப்படுவர்.

இந்தக் கலந்துரையாடலின்போது, ஜனாதிபதியுடன் பிரதமர், வனவிலங்குத் துறை அமைச்சர் ஜயவிக்ரம பெரேரா மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் சமுகமளித்திருந்தனர்.