பாடசாலை மாணவர்களுக்கான பாதணிக்குரிய வவுச்சர் வழங்காது பாதணிகளை வழங்கியமை தொடர்பில் முறைப்பாடொன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கோட்டம் ஒன்றில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாதணிகளுக்கான வவுச்சர் வழங்கப்படாமல் கோட்ட அதிகாரியினால் சில பாடசாலை அதிபர்கள் வரவழைக்கப்பட்டு அவரால் நேரடியாகவே பாதணிகள் வழங்கப்பட்டமை தொடர்பில் மத்திய மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர் மற்றும் மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ள நிலையில், இது தொடர்பாக நுவரெலியா தேர்தல் உதவி ஆணையாளரிடமும் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

இவ்வாறு பாதணி வழங்கிய அதிகாரி கடந்த காலங்களில் அரசியல் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டவர் என்பதோடு தொடர்ந்தும் இவ்வாறு அதிகாரங்களை அரசியல் சார்பாக மலையகக் கல்வி துறையில் மேற்கொள்வது தவறான நடவடிக்கை எனவும் அவர் சுட்டி காட்டினார்.