இங்­கி­லாந்­துக்கு எதி­ரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்­தா­வது போட்­டியில் ஆஸி. வேகப்­பந்­து­ வீச்­சா­ளர்கள் சிறப்­பாக செயற்­பட்டு வரு­கின்­றனர். 

அவுஸ்­தி­ரே­லி­யாவில் விளை­யாடி வரும் இங்­கி­லாந்து அணி ஐந்து போட்­டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்­கேற்­கி­றது. முதல் நான்கு போட்டிகள் முடிவில் அவுஸ்­தி­ரே­லியா 3–0 என முன்­னி­லையில் உள்­ளது. இந்­நி­லையில் நேற்று நடை­பெற்ற ஐந்­தா­வது மற்றும் கடைசி டெஸ்ட் மழை 

கார­ண­மாக 2 மணிநேரம் தாம­த­மாக துவங்­கி­யது. 

இந்தப் போட்டியில் முதலில் கள­மி­றங்­கிய இங்­கி­லாந்து அணிக்கு குக், ஸ்டோன்மேன் ஜோடி சுமா­ரான தொடக்­கத்தை தந்­தது. கம்மின்ஸ் வேகத்தில் ஸ்டோன்மேன் (24), வின்சி (25) ஆட்­ட­மி­ழந்­தனர். அலெஸ்டர் குக் 39 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யே­றினார். 

பின், இணைந்த தலைவர் ஜோ ரூட், மாலன் ஜோடி நிதா­ன­மாக விளை­யா­டி­யது. டெஸ்ட் அரங்கில் ரூட் 35ஆவது அரைச்சதத்தை எட்­டினார். தன் பங்­கிற்கு மாலன் அரைச்சதம் கடந்தார். சிறப்­பாக ஆடி வந்த ரூட் (83), ஸ்டார்க் பந்தில் சிக்­கினார். 

பேர்ஸ்டோவ் (5) ஏமாற்­றினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்­கி­லாந்து அணி முதல் இன்­னிங்ஸில் 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 233 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. 

ஆஸி. சார்பில் கம்மின்ஸ், ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.