இந்­நாட்டின் விளை­யாட்­டுத்­துறை சட்­ட­திட்­டங்­களை மீறி விளை­யாட்டு சங்­கங்­களின் பத­வி­களை பெற்­றுள்ள தேசிய ஒலிம்பிக் சங்­கத்தின் தற்­போ­தைய தலைவர் ஹேம­சிறி பெர்னாண்டோ, செய­லாளர் மெக்ஸ் வெல் டிசில்வா மற்றும் பொரு­ளாளர் காமினி ஜய­சிங்க ஆகியோர் மீது எதிர்­வரும் காலங்­களில் சட்டரீதி­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.

தேசிய ஒலிம்பிக் சங்­கத்தின் தற்­போ­தைய தலைவர், செய­லாளர் மற்றும் பொரு­ளாளர் ஆகியோர் பல ஆண்­டு­க­ளாக தேசிய ஒலிம்பிக் சங்­கத்தின் கணக்­காய்வு அறிக்கையை சமர்ப்­பிக்­காது பிற்­போட்­டுக்­கொண்டே வரும் நிலையில், விளை­யாட்­டுத்­துறை அமைச்சில் பதி­வு­செய்­யப்­ப­டாத 'ட்ரைத்லோன்' என்னும் விளை­யாட்டு சங்­கத்தை உரு­வாக்கி அதில் ஹேம­சிறி பெர்­னாண்டோ சட்­ட­திட்­டங்­க­ளுக்கு முர­ணாக அந்தச் சங்­கத்தின் தலைவர் பத­வியைப் பெற்­றுக்­கொண்டார் என்று கடந்த சில தினங்­க­ளாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

இந்­நி­லையில் நேற்று நடை­பெற்ற விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ரவின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பேசு­கையில், கடந்த 2017ஆம் ஆண்டு நாம் குறிப்­பி­டத்­தக்­க­ளவு முன்­னேற்­ற­மான போக்கை கண்­டுள்ளோம். 

ஒரு சில சங்­கங்­களில் பிரச்­சி­னைகள் இருந்­தன. இன்னும் இருக்­கின்றன. அவை­ய­னைத்தும் மெல்ல மெல்ல சரி­செய்­யப்­படும். அதே­வேளை மைதா­னங்கள் புன­ர­மைப்­பது, புதிய மைதா­னங்­களை உரு­வாக்­கு­வது போன்ற வேலைத்­திட்­டங்கள் இவ்­வாண்டு வேக­மாக நடை­பெறும்.

முக்­கி­ய­மாக உயர்­தர பரீட்­சை­க­ளுக்குப் பின்னர் சிறந்த வீரர்கள் தமக்­கொரு தொழிலைத்தேடிக்­கொண்டு விளை­யாட்டை கைவி­டு­கின்­றனர்.

இதனைத் தடுக்க நான் அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஒன்றை தாக்கல் செய்­துள்ளேன். அதில் தேசிய ரீதியில் பிர­கா­சிக்கும் வீர, வீராங்­க­னை­க­ளுக்கு அரச மற்றும் தனியார் தொழில்­களை விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் மூல­மாக பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை மேற்­கொள்ள கேட்­டுக்­கொண்­டுள்ளேன் என்றார்.

எதிர்­வரும் ஏப்ரல் மாதம் நடை­பெ­ற­வுள்ள பொது­ந­ல­வாய நாடு­க­ளுக்­கி­டை­யி­லான விளை­யாட்டுப் போட்­டி­க­ளுக்கு 13 விளை­யாட்டுப் போட்டிப் பிரி­வு­களில் இலங்கை வீரர்கள் பங்­கேற்­க­வுள்­ளனர்.

அதிலும் முக்­கி­ய­மாக பதக்­கங்­களை வெல்­லக்­கூ­டி­ய­வர்கள் என்று எமது குழுவால் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட்ட வீரர்கள் மட்­டுமே அனுப்­பப்­ப­டுவர். வெறு­மனே வீரர்­களை அனுப்பி அரசின் பணத்தை வீணாக்க முடி­யாது. அத்­தோடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இலங்கை 39 போட்டிப் பிரிவுகளின் கீழ் போட்டியிடுகின்றது என்றார்.