புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களில் ஒருவரை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் மறுத்துள்ளார். 

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு, இன்று பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு மறுப்புத் தெரிவித்துள்ளார்.