ஒரு தொட­ருக்கு மட்­டுமே தலை­வ­ராக செயற்­பட்ட திஸர பெரேரா அதி­ர­டி­யாக அந்தப் பத­வி­யி­லி­ருந்து நீக்கப்பட்டுள்ளார். அதன்­படி மீண்டும் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர் மாற்­ற­மடைவது உறு­தி­யா­கி­யுள்­ளது.

நேற்று நாம் வெளி­யிட்ட செய்­தி­யின்­படி அடுத்த தலை­வ­ராக அஞ்­சலோ மெத்­தியூஸ் அல்­லது சந்­திமால் நிய­மிக்­கப்­ப­டலாம் என்றும் உத்­தி­யோ­க­பூர்வ தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இந்­நி­லையில் இது­கு­றித்து அறிக்கை ஒன்றை வெளியிட்­டுள்ள இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் இலங்­கையின் ஒருநாள் மற்றும் இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் அணி­க­ளுக்­கான அடுத்த தலைவர் யார் என்­பது எதிர்­வரும் 9ஆம் திகதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­படும் என்று அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

இதன்­படி மீண் டும் அணித் தலைமை மாற்­றப்­ப­டு­கி­றது.

தற்­போ­தைய தலை­வ­ரான திஸர பெரேரா இந்­தி­யா­வுக்கு எதி­ரான தொட­ருக்கு மட்­டுமே முழு­மை­யான தலை­வ­ராக செயற்­பட்டார்.

அதற்கு முன் நடை­பெற்ற பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான இரு­ப­துக்கு 20 தொட­ருக்கு மட்­டுமே அவர் தலை­வ­ராக இருந்தார். இந்­நி­லையில் அவ­ரையும் அந்தப் பத­வி­யி­லி­ருந்து தூக்கி புதி­ய­வரை நிய­மிக்கப் போகி­றது இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம்.

இந்­நி­லையில் இது­கு­றித்து கருத்து தெரி­வித்த விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர, அடுத்த தலைவர் யார் என்­பதை இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னம்தான் முடி­வு­செய்யும் என்றார்.

ஆனாலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்­டி­க­ளுக்கு ஒரு தலை­வ­ரும், இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கு ஒரு தலை­வரும் நிய­மிக்­கப்­ப­டலாம் என்று அவர் தெரிவித்தார். அமைச்சரின் கூற்றுப்படி நடந்தால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு தினேஷ் சந்திமால் தலைவராக நீடிப்பார். 

ஆனால் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் என்ன முடிவு எடுக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.