(ஆர்.யசி)

இலங்கை உள்ளக விசாரணை பொறிமுறைகளை கையாண்டாலும் எமக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகின்றது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சர்வதேசத்தை இணைத்துக்கொண்டு இலங்கையின் சிக்கல்களை மாற்றியமைப்பதே சாதகமான வகையில் அமையும்.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் விஜயம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே அமையுமென நம்புகின்றோம்.

 

ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவைக்கைகள் தொடர்பில் உண்மை நிலைமைகள் வெளிப்படுத்தாவிடின் எமது அடுத்தகட்ட நகர்வுகள் மிகவும் கடினமானதாக அமையும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் , வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களையும் தமிழ்,முஸ்லிம் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளமை  தொடர்பில்   வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.