ரஷ்யாவின் தனியார் மிருகக் காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வந்த கரும்புலி தாக்கியதில் ஒருவர் கோரமான முறையில் பலியானார்.

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவின் இஸ்த்ரா மாவட்டத்தின் ஒப்நோவ்லெனி ட்ரூ என்ற கிராமத்தில் இந்த தனியார் மிருகக் காட்சி சாலை அமைந்துள்ளது.

இதில், மிலன் என்று பெயரிடப்பட்ட கரும்புலி ஒன்று பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தீனி போட முயன்ற மிருகக்காட்சி சாலை பணியாளரை கரும்புலி கோரமான முறையில் தாக்கிக் கொன்றது.

புலி தங்கியிருந்த கூண்டின் கதவைத் திறந்தபோது, அதற்கென்றே காத்திருந்தது போல் பாய்ந்து வந்த புலி, பணியாளரை அறைந்து நிலைகுலைத்ததாகவும் பின் அவரது கழுத்தைக் கௌவி இழுத்துச் சென்று கடித்துக் குதறியதாகவும் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் இடம்பெற்ற சில மணி நேரங்களின் பின்னர், கூண்டின் கதவு திறந்திருப்பதை அவதானித்த பணியாளர்கள் சிலர் கரும்புலியைத் தேடியபோதே ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

எனினும் கொல்லப்பட்டவர் பணியாளர் அல்ல என்றும் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தேவையில்லாமல் கரும்புலியின் கூண்டினுள் நுழைய முற்பட்டதாகவும் நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.