யாழ். சண்டிலிப்பாய் பகுதியில் மர்மமான முறையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 21 வயதான முருகானந்தன் ஆனந்தபாபு என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சடலத்தில் அடித்த காயங்கள் சில இருப்பதனால் அந்த நபர் கொலை செய்யப்பட்டு பின்னர் கிணற்றுள் போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.